தல அஜித்திற்காக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் உருவாக்கிய 4 திரைப்படங்கள்?

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகராக அஜித்குமார் வலம் வருகிறார். இறுதியாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படத்தின் கதைக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே சில சலசலப்புகள் ஏற்பட இந்த படம் கைவிடப்பட்டது. அதை தொடர்ந்து அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் அஜித்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாக இருந்தது.

நடிகர் அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருப்பதாகவும்,இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகி ரசிகர்களைக் கொண்டாட வைத்தது. ஆனால் இந்த அறிவிப்பிற்கு பின் பல நாட்கள் படத்தின் படப்பிடிப்புகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. ஆனால் தற்பொழுது விடா முயற்சி திரைப்படம் அஜர்பை ஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகை திரிஷா கலந்து கொண்டுள்ளார். மேலும் ஒரு புதிய அப்டேட்டாக இந்த படத்தில் நடிக்கும் ப்ரியா பவானி சங்கர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித்திற்காக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் உருவாக்கிய நான்கு திரைப்படங்கள் குறித்த அப்டேட்டும், அந்த திரைப்படங்களில் நடிகர் அஜித் நடிக்காமல் இருந்ததற்கான காரணமும் தற்பொழுது வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் இயக்குனர் சங்கர் 1993 ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதைத்தொடர்ந்து காதலன், இந்தியன், முதல்வன், ஜீன்ஸ்,அந்நியன், எந்திரன், நண்பன் என பல முன்னணி ஹீரோக்களை வைத்து பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்பொழுது இயக்குனர் சங்கர் நடிகர் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 திரைப்படங்களை இயக்கி வருகிறார். அதே நேரத்தில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படமும் உருவாகி வருகிறது.

அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் இயக்குனர் சங்கர் முன்னணி நடிகர் அஜித்தை வைத்து ஒரு திரைப்படமும் இயக்கவில்லை. மேலும் இயக்குனர் சங்கருக்கு மிகப் பிடித்த நடிகரான அஜித்திற்காக நான்கு திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். ஆனால் அந்தப் படங்களில் நடிக்க நடிகர் அஜித் சில காரணங்களை கூறி மறுத்துள்ளது. அது என்னென்ன திரைப்படம், அஜித் நடித்த மறுத்த காரணம் என்ன, அதன் பின் அந்த திரைப்படத்தில் நடித்த ஹீரோ யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற நான்கு திரைப்படங்களில் முதல் ஹீரோவாக நடிகர் அஜித் இருந்துள்ளார் ஆனால் அஜித் மறுத்த பின்பு மற்ற ஹீரோக்கள் நடித்து அந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்துள்ளது.

கமலின் வளர்ச்சியை பார்த்து ஏங்கிய சூப்பர் ஸ்டார்! சம்பளத்தில் பல மடங்கு மாஸ் காட்டிய கமல்ஹாசன்!

அந்த வகையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு நடிகர் பிரசாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஜீன்ஸ். இந்த திரைப்படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருப்பார். நடிகர் அஜித்தை இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைக்க இயக்குனர் சங்கர் மிகவும் விருப்பப்பட்டு உள்ளார். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டதால் அந்த நேரத்தில் அஜித் அவர்களால் கால்ஷீட் கொடுக்க முடியாத காரணத்தினால் இந்த படம் கைவிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு 1999 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் திரைப்படத்தில் முதலில் அஜித் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் அந்த திரைப்படம் அரசியலை மையமாக வைத்த கமர்சியல் படம் என்பதால் அஜித் நடிக்க மறுத்துள்ளார்.

அதற்கு அடுத்ததாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந் நடித்து வெளியான சிவாஜி மற்றும் எந்திரன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அஜித் தான். அஜித்தை மனதில் வைத்துக்கொண்டு தான் இயக்குனர் சங்கர் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார் ஆனால் இந்த படத்தின் பட்ஜெட்டை கேள்விப்பட்ட அஜித் நடிக்க மறுத்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் நடிக்கும் பட்சத்தில் இந்த படம் தோல்வியை தழுவினால் அது பலருக்கும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் இந்த படத்தில் அஜித் நடிக்க மறுத்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews