விஜய்சேதுபதி நடித்த ’நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் படப்பிடிப்பின்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டு அதன் பின்னர் இருவரும் நெருக்கமாக உள்ள நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் திடீரென புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நயன்தாராவின் தனியான புகைப்படமும் சமீபத்தில் நடந்த விருது விழாவில் விருது விழாவிலும் நயன்தாரா தனியாக வந்ததாலும், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டதாக வதந்திகள் கிளம்பின
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் நெருக்கமாக உள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன், நாங்கள் இருவரும் என்றும் பிரிய மாட்டோம் என்றும், என்றென்றும் நாங்கள் என்று குறிப்பிட்டு வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது