ஒரு பூதாகரமாக கிளம்பி புயலாக மாறி ஒடுங்கி அடங்கியிருக்கிறது ஏகே 62 பட பிரச்சினை. ஆரம்பத்தில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் ஏகே 62 படப்பிடிப்பு ஆரம்பிக்கும் சமயத்தில் வெடித்தது தான் அந்தப் பிரச்சினையே. முதலில் அஜித்தின் 62 வது படத்தை இயக்கப் போவது விக்னேஷ் சிவன் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானதும் பல தரப்பிலிருந்து விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
அதன் பின் துணிவு படம் வெளியானவுடன் அஜித்தின் 62வது படத்தை எடுக்கும் முயற்சியில் இருந்தனர். பிப்ரவரியில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென விக்னேஷ் சிவன் ஏகே 62வில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் லைக்கா நிறுவனத்திற்கும் அஜித்திற்கும் உடன்பாடு இல்லை எனவும் அதனாலேயே ஏகே 62வில் இருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டதாகவும் அதன் பிறகு நயன்தாரா பல முறை பேசியும் லைக்கா இடம் கொடுக்கவில்லை எனவும் சொல்லப்பட்டது.
அதன் பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்தார். இந்த நிலையில் நேற்று ஒரு தனியார் சேனலுக்கு விக்னேஷ் சிவன் பேட்டி அளித்தார். இதுவரை பொது இடங்களில் ஏகே 62வை பற்றி கேட்கும் போதெல்லாம் கடுப்பாகி போன விக்னேஷ் சிவன் நேற்று அந்த சேனலுக்கு உண்மையில் நடந்தது என்ன என்று சொல்லியிருக்கிறார்.
அதாவது ஸ்கிரிப்ட்டின் இரண்டாம் பாதி தயாரிப்பாளர்களுக்கு பிடிக்க வில்லையாம். கொஞ்சம் மாற்ற சொன்னார்களாம். ஆனால் அஜித் தரப்பில் இருந்து எந்த ஒரு பிரஸரும் இல்லையாம். தயாரிப்பாளர்களிடம் தான் அவருக்கு கொஞ்சம் பிரச்சினை இருந்ததாம்.
என்னைப் போய் இப்படி ஆக்கிட்டாங்களே..? சத்யராஜ் வருத்தப்பட்ட கதாபாத்திரம்..!
ஆனால் விக்னேஷ் சிவனை பொறுத்தவரைக்கும் அவர் நினைப்பதில் இருந்து மாற மாட்டாராம். அதனாலேயே அவர்கள் அந்த கதையில் மாற்றம் சொன்னதால் இவரால் முடியவில்லையாம். வெளியே வந்து விட்டாராம். மேலும் வாய்ப்பு தன்னை விட்டு போனது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது என விக்னேஷ் சிவன் கூறினார்.