என்னைப் போய் இப்படி ஆக்கிட்டாங்களே..? சத்யராஜ் வருத்தப்பட்ட கதாபாத்திரம்..!

Published:

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமைகளில் நடிகர் சத்யராஜும் ஒருவர். வில்லனாக அறிமுகமாகி மிரட்டும் கதாபாத்திரங்களில் அனைவரையும் மிரள வைத்து திடீரென தனது டிராக்கை மாற்றி ஹீரோவாக அவதரித்தார். இவர் ஹீரோவாக நடித்த பெரும்பாலான படங்கள் அரசியல் பேசும் படங்களாகவே அமைந்தன.

sathyaraj

அதுவும் மணிவண்ணன் காம்போவில் சகட்டு மானக்கி அரசியலில் புகுந்து விளையாடியிருப்பார்கள். சத்யராஜ் கெரியரையே திருப்பி போட்ட படமாக ‘வால்டர் வெற்றிவேல்’ படம் அமைந்தது. அதுவரை எதார்த்தமான ஹீரோவாக நடித்த சத்யராஜை முழு ஆக்‌ஷன் ஹீரோவாக ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக காட்டிய படம் வால்டர் வெற்றிவேல்.

அதே போல் ‘அமைதிப்படை’ படமும் அவர் நினைத்து பார்க்க முடியாத வகையில் மாபெரும் வெற்றியை வாங்கித் தந்த படமாக அமைந்தது.இப்படி சத்யராஜ் கெரியரில் ஏராளமான படங்களை கூறலாம். பெரியாரின் கருத்துக்களை கொள்கைகளாக கொண்டவர் சத்யராஜ்.

இப்போதுள்ள ஹீரோக்களுக்கு அப்பாவே சத்யராஜ் தான். அந்த அளவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் குணச்சித்திர வேடம் எது இருந்தாலும் அதை ஏற்று தன் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

sathyaraj

தொடர்ந்து அப்பா கதாபாத்திரத்திலேயே பார்த்த சத்யராஜை திடீரென கட்டப்பா கதாபாத்திரம் மிகவும் தூக்கி கொடுத்தது. பாகுபலி படத்திற்கு பிறகு சத்யராஜை எங்கு பார்த்தாலும் அவரை கட்டப்பா என்றே மக்கள் அழைக்க ஆரம்பித்து விட்டனர். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் பதிந்து விட்டது.

sathyaraj

 

இப்படி சத்யராஜ் சினிமா கெரியரில் மறக்க முடியாத பல கதாபாத்திரங்களில் நடித்தாலும் அவருக்கே சில சமயங்களில் எதுக்குடா இந்த கேரக்டரில் நடித்தோம் என்று நினைக்கும் அளவிற்கு பல படங்களில் நடித்திருக்கிறாராம். அந்த படங்களின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை.

அதையும் மீறி நடித்திருக்கிறேன் என்றால் ஒன்று அந்த படத்தின் ஹீரோ நமக்கு நண்பராக இருக்க வேண்டும் அல்லது படத்தின் தயாரிப்பாளர் பெரிய புரடியூசராக இருக்க வேண்டும். அதனால் தான் அவர்கள் சொல்லை தட்டமுடியாமல் விருப்பமில்லை என்றாலும் நடித்திருப்பேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சத்யராஜ் கூறினார்.

மேலும் உங்களுக்காக...