பல கோடி மதிப்புள்ள பிறந்தநாள் பரிசு கொடுத்து நயன்தாராவை மிரள வைத்த விக்னேஷ் சிவன்!

By Velmurugan

Published:

தமிழ் சினிமாவில் 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரௌடி தான் திரைப்படம் நயன்தாராவின் திரை வாழ்க்கையை மட்டுமல்லாமல் திருமண வாழ்க்கைக்கும் ஒரு வெற்றிப் படியாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் இயக்குனராக இருந்த விக்னேஷ் எனக்கு நயன்தாராவுக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது அதைத் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இருவரும் காதல் பறவைகளாக தமிழ் சினிமாவில் வலம் வந்தனர். அதை தொடர்ந்து கடந்த வருடம் ஜூன் மாதம் மிகப் பிரம்மாண்டமான முறையில் இரு வீட்டார் சம்பந்தத்துடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்தது.

அதைத்தொடர்ந்து வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தையை பெற்றெடுத்து நயன்தாரா விக்கி ஜோடி மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் இந்த குழந்தைகளின் ஒரு வயது பிறந்த நாளை மிகப்பிரமாண்டமாகக் கொண்டாடிய நயன்தாரா அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். சமீபத்தில் நயன்தாரா, ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து உலக சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து நயன்தாரா தற்பொழுது தனது 75வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வரும் நயந்தாரா தனது திரை வாழ்க்கை, ரவுடி பிக்சர்ஸ் என சொந்த தயாரிப்பு நிறுவனத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். திரைப்படங்களை தொடர்ந்து சொந்த தொழில் அதிக ஆர்வம் கொண்ட நயன்தாரா சமீபத்தில் 9 ஸ்கின் ப்ராடெக்ட் ஒன்றை அறிமுகம் செய்து அதற்கான விளம்பரத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு முன்னதாக நயன்தாரா லிபான் எனும் பியூட்டி ப்ராடெக்ட் ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து நயன்தாரா செமி நயன் என்னும் நாப்கின் ப்ராடெக்ட் ஒன்றை அறிமுகம் செய்து சொந்தத் தொழிலில் கொடிகட்டி பறந்து வருகிறார்.

இந்த நிலையில் 20 ஆண்டிற்கு மேலாக திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நயன்தாரா சமீபத்தில் தனது 39 ஆவது பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாடி உள்ளார். இந்த பிறந்தநாளில் தனது கணவர் விக்னேஷ் சிவன் தனக்கு அளித்த மிகப்பெரிய லக்சுரியான கிப்ட் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவிற்கு சுமார் மூன்றரை கோடி மதிப்புள்ள மிகப் பிரம்மாண்டமான மெர்சிடியஸ் பென்ஸ் ஏஜி காரை பரிசளித்துள்ளார். மினி பிரைவேட் ஜெட் என கூறும் அளவிற்கு சிறப்பம்சங்களை கொண்ட இந்த கார் நயன்தாராவின் ட்ரீம் காராக இருந்துள்ளது.

தளபதி விஜய்க்காக மூன்று வருடம் பிரேக் எடுக்கும் தல டோனி!

இந்த காரின் சிறப்பம்சங்கள் 4.9 நிமிடத்தில் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வசதி உடையது. மேலும் இந்த கார் அதிகபட்சமாக 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. குறிப்பாக பர்ஸ்ட் கிளாஸ் பிரைவேட் செட்டில் எந்த அளவு வசதிகள் இருக்குமோ அந்த வசதிகள் அனைத்தும் இந்த காரின் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கும். காரின் இருக்கைகளை 45 டிகிரி கோணத்தில் சாய்த்து கொள்ள முடியும். மேலும் இருக்கைகளுடன் மசாஜரும் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் கதவு திறக்கும் முறை, இருக்கைகளை சரி செய்து கொள்ளும் முறை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் ஒரு மினி குளிர்சாதனப்பெட்டியும் உள்ளது.

குறிப்பாக இந்த சொகுசு காரை வாங்கிய முதல் ஹோலிவுட் ஆக்டர் நயன்தாரா தான் என்ற பெருமை கிடைத்துள்ளது. 2021 இல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரை ரன்பீர் கபூர், டாப்ஸி , ஷில்பா ஷெட்டி, அர்ஜுன் கபூர் என எக்கச்சக்கமான பாலிவுட் பிரபலங்கள் போட்டி போட்டு வாங்கியுள்ளனர்.