தளபதி விஜய்க்காக மூன்று வருடம் பிரேக் எடுக்கும் தல டோனி!

தளபதி விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் போன்ற பிரபல நடிகர்களை வைத்து படங்களை தயாரிக்க வேண்டும் என பல தயாரிப்பு நிறுவனங்களின் ஆசையாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை சன் பிக்சர்ஸ் மற்றும் லைக்கா நிறுவனங்கள் பல கோடி முதலீடு செய்து மிக அதிரடியாக தயாரித்து வருகிறது. மேலும் மிகப்பெரிய பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் சில படங்களை இரண்டு அல்லது மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வெளியிட்டு தங்கள் வெற்றியை பகிர்ந்து கொண்டும் வருகின்றனர்.

அந்த வகையில் விளையாட்டு துறையை தொடர்ந்து திரைப்படங்களில் முதலீடு செய்து நல்ல திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்ற ஆசை பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆசையின் பெயரில் டோனி என்டர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கியிருந்தார். அதில் விஜய், அஜித், ரஜினி, கமல், நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி பிரபல நடிகர்களை வைத்து திரைப்படங்கள் தயாரிக்க வேண்டும் என்பதை ஆசையாக வைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. அந்த நேரத்தில் தளபதி விஜய் மட்டும் சிறிது காலம் பொறுத்துக் கொள்ளும் மாறும் அதன் பின் தான் உங்கள் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாகவும் கூறியிருந்தார்.

தளபதி விஜய் அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் மகேந்திர சிங் டோனி பொறுமையாக இல்லாமல் தளபதி விஜய்க்கு பதிலாக மற்றொரு ஹீரோவை வைத்து தனது முதல் படம் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வந்துள்ளார். நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் LGM லெட்ஸ் கெட் மேரீட் என்னும் கமர்சியல் பொழுதுபோக்கு திரைப்படத்தை தல டோனி தயாரித்து வெளியிட்டு இருந்தார். இந்த படத்தில் லவ் டுடே ஹீரோயின் இவானா கதாநாயகியாக நடித்திருப்பார். ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் முன்னணி பலம்பெரும் நடிகை நதியா மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

திருமணத்திற்கு தயாரான அஜித் பட இயக்குனர்! மணப்பெண் யாரு தெரியுமா?

டோனி தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. சுமாரான வெற்றியை பெற்ற LGM திரைப்படம் மகேந்திர சிங் டோனிக்கு பல நஷ்டங்களை உருவாக்கிக் கொடுத்தது. அதன் பின் தயாரிப்புத் துறையில் இருந்து தாம் சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாகவும் மூன்று வருடங்களுக்கு பின் படங்கள் தயாரிப்பதில் களமிறங்க உள்ளதாகவும் தோனி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மூன்று வருட கால இடைவேளை எதற்கு என்ற கேள்வி தற்போது சினிமா ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. தளபதி விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் அரசியலில் களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின் தளபதி விஜய் திரைப்படங்களில் கவனம் செலுத்தும் பட்சத்தில் அந்த படத்தை டோனி தயாரிக்க இருப்பதாகவும் அது வரை வேறு எந்த ஹீரோக்களின் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் இல்லாமல் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தல டோனி மற்றும் தளபதி விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.