நேத்து நைட்டோடு நைட்டா ரசிகர்களைக் காக்க வச்சி திடீர்னு விடாமுயற்சி டீசரை லைகா நிறுவனம் வெளியிட்டாங்க. அப்பவும் ரசிகர்கள் தூங்காம முழிச்சிருந்து விடாமுயற்சி டீசரைப் பார்த்து உற்சாகத்துல துள்ளுனாங்க.
பொங்கல்
மகிழ்த்திருமேனியின் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜீத் நடிப்பில் வெளியாகிறது விடாமுயற்சி. இந்தப் படம் வரும் பொங்கலுக்குத் திரைக்கு வர உள்ளது. இது குறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்றாருன்னு பாருங்க.
அஜர் பைஜான்
விடாமுயற்சி தள்ளித் தான் போகுது. குட் பேட் அக்லி தான் பொங்கலுக்கு வரப் போகுதுன்னாங்க. அஜீத் தரப்புல அவர் படத்தை முடிச்சிட்டாங்கன்னு சொன்னாங்க. தொடர்ந்து ரசிகர்கள் விடாமுயற்சி மேல தான் ஆர்வமா இருக்காங்க. அதுக்குக் காரணம் என்னன்னா ஏன் அஜர் பைஜானைத் தேர்ந்தெடுத்தாங்க? அங்க போனவங்களுக்கு நிறைய பிரச்சனை.
சீதோஷ்ண நிலை
அங்குள்ள சீதோஷ்ண நிலை. குறிப்பா ஆர்ட் டைரக்டர், வில்லனோட மரணம். எல்லாம் தாண்டி எதுக்கு இந்த லொகேஷனைப் பார்க்கும்போது தான் தெரியுது. அப்படியே ஹாலிவுட் படம் பார்த்த மாதிரி இருக்குது. அர்ஜூன் வில்லன் மாதிரி அப்படியே சிரிக்கிற காட்சியில இருந்து தொடங்குது. அஜீத், திரிஷா டிராவல்ல போயிக்கிட்டு இருக்காங்க.
அஜீத்துக்கு டயலாக்
போற இடத்துல மனைவியைத் தொலைச்சிட்டாரா இல்ல காணாமப் போயிட்டாரான்னு என்னன்னு தெரியல. ;எல்லாரும் எல்லாமும் கைவிடும்போது உன்னையே நீ நம்பு;ங்கற அந்த டயலாக் அஜீத்துக்கு அப்படியே பொருந்தும். எல்லாரும் எல்லா நேரமும் அவர் முதுகில் குத்தியபோது ஒரு பீனிக்ஸ் பறவையாக இன்னைக்கு வரைக்கும் தல ஏகே என்கிற இடத்துல அவர் நிக்கிறாரு.
சால்ட் லுக் அஜீத்
இதுல மாற்றுக்கருத்து இல்லவே இல்லை. விடாமுயற்சி டீசர் கொண்டாடப்பட வேண்டியது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கைத் தாண்டி வெறும் சால்டாக மட்டும் தான் ஸ்டைலிஷா இருக்கார் அஜீத். அவரை எந்தக் கோணத்தில் காட்டினாலும் நாங்க ரசிக்கத் தயார் என்கின்றனர் ரசிகர்கள்.
திரிஷா
பொன்னியின் செல்வனுக்குப் பிறகு பெரிய ரீ என்ட்ரி திரிஷாவுக்கு இந்தப் படம் அமைந்துள்ளது. பொங்கலுக்கு விடாமுயற்சி தான். அஜீத் சிரிக்கிற சிரிப்பு. அடுத்தடுத்த காட்சிகள் தெறிக்க விடுது. பெரிய பிரியாணி விருந்துக்கு இந்த ஒரு சோறு பதம். விடாமுயற்சியில கூட இப்படி ஒரு டயலாக் வரும். முயற்சி முயற்சி முயற்சி திருவினையாக்கும்னு ஒரு டயலாக் வரும். அஜீத் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.