சூப்பர்ஸ்டார் ரஜினி வேட்டையன் ஆடியோ லாஞ்ச்ல என்ன பேசினார்னு பார்க்கலாமா…
ஒரு விஷயம் நாம தொடர்ந்து பண்ணினோம்னா அடுத்தடுத்து என்ன என்ன என்ற கேள்விகள் நமக்குள்ள வந்துக்கிட்டே இருக்கும். ஒரு தோல்வியைப் பார்த்தா அடுத்து என்ன பண்ணப் போறோம்கற பயம் நமக்கு வந்துடும். அதே மாதிரி தான் ஒரு பெரிய வெற்றியைப் பார்த்ததும் அடுத்து என்ன பண்ணப் போறோம்கற பயமும் எனக்குள்ள வந்துச்சு.
ஏன்னா அடுத்தது வெற்றி பெறலைன்னா ஃபார்ம்ல இல்லன்னு சொல்லிடுவாங்க. அந்த மாதிரி மிகப்பெரிய வெற்றியை நான் ஜெயிலர் படத்துல பார்த்தேன். அதுக்கு அப்புறம் நான் முழுமையா நடிச்ச படம் தான் வேட்டையன். இடையில கெஸ்ட் அப்பியரன்ஸா லால் சலாம் படத்துல நடிச்சேன்.
ஜெயிலர்க்கு அப்புறம் நிறைய கதைகள் கேட்டேன். ஆனா என்ன பண்றதுன்னு தெரியல. ஏன்னா நிறைய பிரஷர். பெரிய வெற்றி கொடுத்தாச்சு. அப்படி வந்தது தான் வேட்டையன் கதை. அதைக் கேட்டேன். ஆனா இதைக் கமர்ஷியலா மாற்றிக் கொண்டு வாங்கன்னு சொன்னேன். ஏன்னா கோடிகள்ல நம்மளை நம்பி படம் எடுக்குறாங்க. அவங்களுக்குப் போட்ட காசு திரும்ப கிடைக்கணும்.
அப்போ த.செ.ஞானவேல் சார் நான் நெல்சன் மாதிரியோ, லோகேஷ் மாதிரியோ கமர்ஷியலா கொடுக்க முடியாது. ஆனா என் ஸ்டைல்ல கொடுக்குறேன். அது ரசிகர்களுக்கு ரொம்ப திருப்தியா இருக்கும்னு சொன்னாரு.
அதைத் தான் நானும் சொல்றேன்னு சொன்னேன். அப்புறம் ரெண்டே நாளில் வந்து சொன்னார். முதல்ல கொஞ்சம் கதை சொன்னாரு. இதுக்கு அப்புறம் கமர்ஷியல் வந்துக்கிட்டே இருக்கும்னாரு. சார் கமர்ஷியலை சொல்லல. டப்பு வரணும்னு சொன்னேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். டெக்னீஷியன் எல்லாம் ரஜினி சாய்ஸ் தான்னு சுபாஷ்கரனே சொல்லிட்டாராம். அனிருத்துக்கும் ரஜினி டபுள் ஓகே சொன்னாராம்.
அமிதாப்பச்சன், ராணா, பகத்பாசில் எல்லாமே ரஜினி சாய்ஸ் தானாம். பகத்பாசில் எனக்கு சம்பளம் கூட வேண்டாம். ஒன்றரை மாசம் டைம் கொடுங்கன்னு சொன்னாரு.
எங்கிட்ட வேணாம். நான் அடுத்து கூலி படத்துல வேற கமிட் ஆகிட்டேன். லோகேஷ்கிட்ட கேட்கணும்னு சொன்னேன். அவரும் டைம் எடுத்துக்கோங்க சார்னு சொல்லிட்டாரு. ஏன்னா அவர் இன்னும் கதையை ஒழுங்கா பண்ணல. அதான் டைம் கொடுத்துட்டாருன்னு லோகேஷை கலாய்த்தார் ரஜினி.
என்னைப் பழிவாங்கறதுக்காகவே மஞ்சுவாரியாரைக் கொண்டு வந்தீங்களான்னு ரஜினி கலாய்ச்சாராம். ஏன்னா அவரு தளதளன்னு ரொம்பவே அழகா இருந்தாராம். அமிதாப்பச்சன்கிட்ட இருந்து நிறைய விஷயங்களை அழகாக் கத்துக்கிட்டேன்னாரு.
முள்ளும் மலரும் படத்துல வர்ற ‘ரெண்டும் கையும் ரெண்டு காலும் இல்லன்னா கூட இந்தக் காளி பொழைச்சிக்குவான் சார்’னு ரஜினி அதே டயலாக்கைப் பேசிக்காட்டினாரு. ஆடியன்ஸ் மத்தியில பலத்த கைதட்டல்கள். இந்த உலகத்துல சகுனிகள் நிறைய பேர் இருக்காங்க. நல்லவனா இருந்தா பொழைச்சிக்கவே முடியாது.
கொஞ்சம் சாணக்கியத்தனமும், கொஞ்சம் சாமர்;த்தியமும் இருக்கணும். அதனால பார்த்துப் பத்திரமா இருந்துக்கோங்க. இப்படி ரஜினி தனக்கே உரிய ஸ்டைலில் முத்தாய்ப்பாக அட்வைஸ் உடன் விடைபெற்றது அரங்கத்தை அதிர வைத்தது.