#Breaking பழம்பெரும் நடிகர் உடல்நலக்குறைவால் மரணம்; சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

By Amaravathi

Published:

புகழ் பெற்ற தெலுங்கு நடிகர் கைகாலா சத்தியநாராயணா தனது 87 வயதில் உடல் நலக்குறைவால் இன்று காலை மரணமடைந்தார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கைகலா சத்ய நாராயணா, சில மாதங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இந்நிலையில் கைகலா சத்ய நாராயணாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

1959 ஆம் ஆண்டு ‘செப்பை கூத்துரு’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் காலடி பதித்த கைகாலா சத்தியநாராயணா, 2019-ல் கடைசியாக ‘மகரிஷி’ படத்தில் நடித்திருந்தார். என்.டி.ஆர் நடித்த ‘யமகோலா’ எமதர்மனாக நடித்தது அவருக்கு புகழையும், பெயரையும் வாரிக்கொடுத்தது.

750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் பஞ்சதந்திரம், பெரியார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பஞ்சதந்திரம் படத்தில் இவர் பேசிய ‘சின்ன கல்லு பெத்த லாபம்’ டைலாக் இன்றளவும் ட்ரெண்டிங்கான வசனமாக உள்ளது.

இவரது உடல் நாளை மகா பிரஸ்தானத்தில் இறுதிச்சடங்கு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கைகாலா சத்தியநாராயணாவிற்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...