நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி ஒரு பிரபல கதாநாயகி என்பது பலருக்கும் தெரியாத உண்மை.
கதாநாயகி, குணச்சித்திர கேரக்டர் ஆகியவற்றில் நடித்த நடிகை மணிமாலா தான் வெண்ணிறை ஆடை மூர்த்தியின் மனைவி. இவர்கள் இருவரும் சந்தித்தது பலமுறை என்றாலும் காதல் அரும்பியது கிரிக்கெட் விளையாட்டின் போதுதான் என்பது ஒரு சுவாரசியமான தகவல்.
இந்த படத்தில் நடித்த ஒருவர் கூட மேக்கப் போட்டு நடிக்கவில்லை.. இப்படி ஒரு சிவாஜி கணேசன் படமா?
ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான ‘வெண்ணிறை ஆடை’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் மூர்த்தி. இந்தப் படத்திற்கு பிறகு அவர் வெண்ணிற ஆடை மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். இந்த படத்திற்கு பிறகு அவர் பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து இருக்கிறார். வெண்ணிற ஆடை மூர்த்தி தனக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு பாடி லாங்குவேஜில் வசனம் பேசுவார்.
இந்த நிலையில்தான் கடந்த அறுபதுகள், எழுபதுகளில் பிரபலமாக இருந்த மணிமாலாவை அவர் சந்திக்க நேர்ந்தது. ஆரம்பத்தில் ஒரு சக நடிகையாக சந்தித்துக் கொண்டிருந்த நிலையில், பெரிய நடிகையாக இருந்தாலும் பணிவுடன் அடக்கத்துடனும் இருந்ததால் அவர் மேல் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து இந்த பெண் நமக்கு வாழ்க்கை துணையாக வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துள்ளார். அதன்பின்னர் இருவரும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் பழகினர். மணிமாலாவுக்கும் இவர் மீது காதல் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது, ஆனால் அவர் வெளிப்படுத்தாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் தான் மதுரையில் நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஜெமினி கணேசன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், நடிகைகளில் மணிமாலாவும் வந்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதுதான் அருகருகே உள்ள அறைகளில் தங்கியிருந்த மணிமாலா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகிய இருவரும் பல மணி நேரம் மனம் விட்டு பேசியதாகவும் அப்போதுதான் இருவரும் ஒருவரை ஒருவர் தங்களது காதலை வெளிப்படுத்திக் கொண்டதாகவும் தெரிகிறது.
பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..
அதன்பின் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஒருசில படங்களில் மணிமாலா நடித்தாலும் குழந்தை பிறந்த பிறகு நடிப்பதை குறைத்து கொண்டார். இந்த தம்பதிக்கு மனோ என்ற மகன் உள்ளார். அவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
மனோவின் மனைவி சபிதா ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர் மற்றும் பரதநாட்டியம் தெரிந்தவர். அமெரிக்காவில் பரதநாட்டிய பள்ளியும் நடத்தி வருகிறார். மகன், மருமகள் மற்றும் பேரனை பார்ப்பதற்காக வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் மணிமாலா வருடத்திற்கு மூன்று முறை அமெரிக்கா செல்வதாகவும் கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகு நடிப்பே வேண்டாம் என்று இருந்த மணிமாலா ஒரு சில பிரபலங்களின் பட வாய்ப்பு வந்தபோது அவரால் மறுக்க முடியவில்லை. அப்படி வந்த ஒரு திரைப்படம்தான் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’. இந்த படத்தில் அவர் ஒரு மதர் கேரக்டரில் நடித்திருப்பார்.
இதனை அடுத்து பாலசந்தர் மிகவும் விரும்பி கேட்டுக் கொண்டதற்கு இணங்க ‘சிந்து பைரவி’ படத்தில் சுஹாசினி அம்மா கேரக்டரில் அவர் சூப்பராக நடித்திருப்பார். இருப்பினும் அவர் அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்துவிட்டு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
எம்ஜிஆர் – ஜெயலலிதா நடிக்க இருந்த படம்.. திடீரென ரஜினி – அம்பிகா நடிக்கும் படமாக மாறியது எப்படி?
வெண்ணிற ஆடை மூர்த்தியும் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பதை நிறுத்திவிட்டார். நிம்மதியான வாழ்க்கை, அவ்வப்போது மகனை பார்க்க அமெரிக்கா செல்வது ஆகியவை தான் தற்போது மூர்த்தி – மணிமாலா தம்பதிகளின் பணியாக உள்ளது.