‘வெண்ணிலா கபடிக்குழு’ பட நடிகர் திடீர் மரணம்; சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

வெண்ணிலா கபடிக்குழு திரைப்பட புகழ் நடிகர் ‘மாயி’ சுந்தர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல்நிலை குறைவால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரி…

Sundar

வெண்ணிலா கபடிக்குழு திரைப்பட புகழ் நடிகர் ‘மாயி’ சுந்தர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல்நிலை குறைவால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

Sundar

மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரி கூட்டம், மிளகா, சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி, கட்சிக்காரன் என ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்!.

சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோய்க்காக, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 50. திருமணம் செய்துக் கொள்ளாமல் தனியே வசித்து வந்த சுந்தர், இறுதியாக அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ படத்தில் நடித்துள்ளார்.