நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் திரைப்படங்கள் தற்போது கோலிவுட் திரையுலகில் அதிகம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் த்ரிஷா முக்கிய வேடத்தில் நடித்த ’பரமபத விளையாட்டு’ பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்னொரு பிரபல நடிகையான வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்த ’வெல்வெட் நகரம்’ என்ற திரைப்படம் அதற்கு அடுத்த வாரம் அதாவது மார்ச் 6ம் தேதி வெளியாக உள்ளது
இரண்டு பிரபல நடிகைகளின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
வெல்வெட் நகரம் திரைப்படத்தில் வரலட்சுமி ஒரு பத்திரிக்கையாளராக நடந்திருப்பதாகவும் இந்த படத்தில் உள்ள ஆக்ஷன் காட்சிகளில் டூப் இன்றி தைரியமாக நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது