எழுத்தாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய நாவல் வேள்பாரி. ஆனந்த விகடனில் தொடராக வந்தது. படிக்கப் படிக்க பெரிய இன்ட்ரஸ்ட்டா இருக்கும். அந்த நாவலை எடுத்து படிக்க நினைத்தா வைக்கவே மாட்டாங்க. அவ்வளவு இன்ட்ரஸ்ட்டா இருக்கும். அதைத் தான் இயக்குனர் ஷங்கர் படமாக எடுக்க இருக்கிறார். அதை 3 பாகமாக திரைக்கதை எழுதி தயாராக வைத்துள்ளாராம் ஷங்கர்.
கொரோனா காலகட்டத்தில் அந்த நாவலைப் படிக்க வைக்க பரிந்துரைத்தாராம் ஒருவர். அதனால் தான் அதை எடுக்க நினைத்து ஷங்கர் அதற்கான ரைட்ஸையும் வாங்கி வைத்தாராம்.
வேள்பாரி என்ற ஒரு மன்னன் பறம்புமலையின் மீது ஆட்சி செய்து வந்தான். அவன் சேர, சோழ பாண்டிய மன்னர்களைக் காட்டிலும் மேலானவன். அதாவது அவர்களையும் விட சிறந்த கொடை வள்ளல்.
எப்படி என்றால் இந்த மன்னர்கள் எல்லாம், பொன்னையும், பொருளையும் தான் வாரிக் கொடுப்பார்கள். அவன் கருணையையும் சேர்த்தேக் கொடுப்பானாம். உதாரணத்திற்கு ஒரு காட்சியைச் சொல்ல வேண்டும் என்றால் வேள்பாரியைக் காண கபிலன் என்ற புலவன் செல்கிறான். மன்னன் இதை ஒற்றன் மூலமாக அறிந்து ஐயய்யோ தமிழ் கூறும் ஒரு புலவன் வெறும் காலால் நடந்து வருவது நம் ஆட்சிக்கு இழுக்கல்லவா என்று அவனே ஒரு பத்து மைல் தூரம் சென்று தான் மன்னன் என்பதைக் காட்டிக் கொள்ளாமல் கபிலனைத் தோளில் வைத்து சுமந்தே சென்றானாம்.
அதன்பிறகு தான் கபிலனுக்கே தெரிந்ததாம். தன்னை சுமந்து வந்தது மன்னன் என்று. அதன்பிறகு மன்னன் அவனுக்கு பரிசாகக் கொடுத்தது என்ன தெரியுமா? தேவாங்கு. இதன் சிறப்பு என்னவென்றால் கடலில் கப்பலில் அந்தக் காலத்தில் கொண்டு செல்வார்களாம். இது எங்கு சென்றாலும் வடக்கு நோக்கியே திரும்பிப் பார்க்குமாம்.
அப்படி இதை ஒரு திசைமானியாகவே அவர்கள் பயன்படுத்தினார்களாம். அப்படிப்பட்ட ஒரு அற்புதப் பரிசைத் தான் வேள்பாரி மன்னன் கபிலனுக்குக் கொடுத்துள்ளான். இது கதையில் உள்ள ஒரு காட்சி தான். இதுவே இப்படி இருந்தால், கதை முழுக்கப் படிக்கும்போது படிக்கப் படிக்க பரவசமூட்டுவதாகவே அமைந்திருக்கும் இந்த வேள்பாரி கதை.
சமீபத்தில் ஒரு படத்தோட டீசரைப் பார்த்தாராம். அதுல வேள்பாரில ஒரு காட்சியை அப்படியே எடுத்துருக்காங்க. அது தேவாராவா, கங்குவாவான்னு குழப்பமாக இருக்கு. அது தேவாராவாகத் தான் இருக்கும். கங்குவாவாக இருந்தால் சூர்யாகிட்டயே போன் பண்ணி சொல்லிருப்பாரு.
பாகுபலியில் கூட காளை மாடுகளின் கொம்புவில் தீயை வைத்துக் கொளுத்தியது வேள்பாரியில் வரும் ஒரு காட்சி தான். அதை ராஜமவுலி பார்த்து எடுத்தாரா அல்லது அவரது அப்பா அந்தக் கதையைப் படித்து சொன்னாரா என்று தெரியவில்லை.
ஷங்கர் இந்தியன் 2ல நல்லா எடுக்கலன்னு அவரை ஒதுக்கிடாதீங்க. வேள்பாரியை எடுத்தாருன்னா மிகச்சிறப்பாக எடுக்கக்கூடியவர். அவர் எடுப்பாருன்னு நம்புகிறேன். வேள்பாரி கபிலருக்கு செய்த ஒரு சேவை போதும். அது ஒன்றே அந்தக் கதையின் சிறப்பைச் சொல்லும். அதனால் அந்தக் கதையில் இருந்து யாரும் காட்சியை எடுக்க வேண்டாம். அது காப்புரிமை பெறப்பட்ட கதை. தேவாராவிலோ, கங்குவாவிலோ வேள்பாரியின் காட்சியைப் பயன்படுத்தி இருந்தால் அது மிகப்பெரிய தவறு. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.