கடைசி வரை டைட்டிலே போடாத படம்.. படத்தின் முடிவில் இயக்குனர் என்ன செய்தார் தெரியுமா?

By Bala Siva

Published:

ஒரு படத்தின் ஆரம்பத்தில் டைட்டில் போடுவார்கள் அல்லது சில நிமிடங்கள் படம் ஓடிய பின் டைட்டில் போடுவார்கள் அல்லது படத்தின் ஆரம்பத்தில் சில முக்கிய பெயர்களை மட்டும் போட்டுவிட்டு படத்தின் இறுதியில் மொத்த டைட்டிலும் போடுவார்கள் என்பது தெரிந்ததே.

ஆனால் படத்தின் இறுதி வரை டைட்டிலே போடாமல் ஒரு தமிழ் படம் உள்ளது என்றால் அது ‘பொம்மை’ திரைப்படம்தான். வீணை எஸ் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ‘பொம்மை’ திரைப்படத்தில் பொம்மைதான் கதாநாயகன் என்று சொல்லலாம்.

பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

இந்த படத்தில் முதல் நொடியே கதை தொடங்கிவிடும். டைட்டில் வரும் வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் கடைசிவரை ஏமாந்து போவார்கள். கடைசியில் என்னதான் செய்தார் இயக்குனர் என்பதை கடைசியில் பார்ப்போம்.

bommai3 1

இந்த படத்தின் கதையாக சோமசுந்தரம் என்ற தொழிலதிபர் தனது பார்ட்னருடன் சேர்ந்து தொழில் செய்து கொண்டிருப்பார். மிகப்பெரிய செல்வந்தரான அவரை கொலை செய்துவிட்டால் மொத்த சொத்தும் தனக்கு வந்துவிடும் என்று அவரது பாட்னர் நினைப்பார்.

அவருடைய நிறுவனங்களில் சோமசுந்தரத்தின் உறவினர்கள்தான் வேலை செய்து வருவார்கள். இந்த நிலையில் உறவினர்களில் சிலரை தன் பக்கம் இழுத்துக் கொண்டு சோமசுந்தரத்தின் பார்ட்னர் அவரை கொலை செய்ய முயற்சிப்பார்.

அப்போது சோமசுந்தரம் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்ட நிலையில் அவரது கையில் வெடிகுண்டு வைத்த பொம்மை ஒன்றை கொடுப்பார் பார்ட்னர். அந்த பொம்மை வெடித்தால் சோமசுந்தரம் இறந்து விடுவார் அனைத்து சொத்தும் தனக்கு வந்துவிடும் என்று அவருடைய பார்ட்னர் திட்டமிடுவார்.

இந்த படத்தில் நடித்த ஒருவர் கூட மேக்கப் போட்டு நடிக்கவில்லை.. இப்படி ஒரு சிவாஜி கணேசன் படமா?

அப்போதுதான் சோமசுந்தரம் விமான நிலையத்திற்கு டாக்ஸியில் செல்லும்போது பொம்மையை டாக்ஸியில் மறந்து வைத்து விடுவார். அந்த டாக்ஸியில் ஏறும் ஒரு தம்பதிகள் தங்களுடைய குழந்தைக்கு விளையாட அந்த பொம்மையை எடுத்துக் கொடுக்கலாம் என்று முடிவு செய்வார்கள். குழந்தைக்கு கொடுப்பார்கள்.

bommai

ஆனால் அந்த குழந்தை வேறொரு குழந்தையிடம் பொம்மையை கொடுக்க அப்படியே மாறிக்கொண்டே செல்லும். காருக்குள் இருந்த பொம்மை வெடிக்கவில்லையே என்று பார்ட்னர் யோசித்து கொண்டு இருப்பார். அப்போது விமானம் பழுதாகிவிட்டது என்று சோமசுந்தரம் மீண்டும் வீட்டுக்கு திரும்பிவிடுவார்.

அப்போது மீண்டும் அவரிடம் ஒரு வெடிகுண்டு வைத்த பொம்மையை கொடுப்பார்கள். அந்த வெடிகுண்டு பொம்மையையும் அவர் காரில் மறந்து வைத்து விடுவார். அதன் பின்னர் அந்த பொம்மை வெடித்ததா? அந்த பொம்மை வெடித்ததால் யார் யார் இறந்தார்கள்? சோமசுந்தரத்தின் பார்ட்னரின் திட்டம் பலித்ததா? என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.

இந்த படத்தின் கதை ஹாலிவுட் படத்தில் கூறுவது போலவே மிகவும் சிறப்பாக கூறியிருப்பார்கள். ஆனால் இந்த படம் அந்த நேரத்தில் பலருக்கும் புரியவில்லை என்பதால் இந்த படம் எதிர்பார்த்து வெற்றியை பெறவில்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை புரிந்து கொண்டவர்கள் கொண்டாடினர்.

bommai 2

இந்த படத்தில் இடம்பெற்ற ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்ற பாடலின் மூலம் தான் தமிழ் திரை உலகில் கே.ஜே.ஜேசுதாஸ் என்ற பாடகர் அறிமுகமானார்.

தற்போது டைட்டில் பிரச்சனைக்கு வருவோம். இந்த படத்தின் இறுதியில் வீணை எஸ் பாலச்சந்தர் நாற்காலியில் உட்கார்ந்தவாறு நான்தான் இந்த படத்தின் இயக்குனர், எனது பெயர் பாலச்சந்தர், நான்தான் இந்த படத்தில் சோமசுந்தரம் கேரக்டரில் நடித்திருந்தேன் என்று கூறுவார்.

பட்ஜெட்டை விட 800 மடங்கு லாபம்.. எம்ஜிஆர் இயக்கிய முதல் திரைப்படம்..! என்ன படம் தெரியுமா?

அதேபோல் இந்த படத்தில் நடித்தவர்கள் வரிசையாக ஒவ்வொருவராக வந்து தனது பெயர் மற்றும் தான் நடித்த கேரக்டர் பெயரை கூறுவார்கள். அதேபோல் தொழில்நுட்ப கலைஞர்களையும் பேச வைத்திருப்பார். இறுதியில் கடைசியாக உங்களுக்கு ஒரு கேரக்டரை அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லி பொம்மையை அறிமுகப்படுத்துவார். கீ கொடுக்கப்பட்ட அந்த பொம்மை நடந்து வருவது போன்ற காட்சியுடன் சுபம் என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டுமே டைட்டில் போடப்படும். மிகவும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் கடந்த 1964ஆம் ஆண்டு வெளியானது.