பட்ஜெட்டையும் வசூல் செய்யாத வந்தா ராஜாவாதான் வருவேன்!!

By Staff

Published:

வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படமானது இந்த ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க வெளிவந்த படமாகும்.

இந்தப் படத்தில் மேகா ஆகாஷ், கேத்தரின் தெரசா, யோகிபாபு, ரோபோ ஷங்கர், மஹத் ராகவேந்திரா, பிரபு, ராஜேந்திரன், ரம்யா கிருஷ்னன், நாசர் ஆகியோர் நடித்து இருந்தனர்.

வழக்கம்போல் சுந்தர்.சி பாணியிலான காதல் மற்றும் நகைச்சுவையினை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாக இருந்தது.

f1c5640623f5d875e072ca5f651dcb67

தனது தாத்தா நாசரின் கடைசி ஆசையான காதல் திருமணத்தால் பிரிந்த தன் குடும்பத்தை எப்படி சிம்பு இணைக்கிறார் என்பதே கதையாகும்.

அத்தை வீட்டில் டிரைவராக சேரும் சிம்பு, அத்தையின் மகள் மீது காதல் கொள்கிறார், கடைசியில் சிம்புவின் காதலும், தாத்தாவின் ஆசையும் எப்படி நிறைவேறுகிறது என்பதே மீதிக் கதையாகும்.

இந்தத் திரைப்படம் தெலுங்கு நடிகர் கல்யாண் நடிப்பில் வெளியான அத்ரிந்திகி தாரடி படத்தின் ரீ மேக்காக இருந்தாலும், சுந்தர் சி அவர் பாணியில் கதையினை எடுத்திருப்பதும் தெளிவாகத் தெரியும்.

கதை பழைய கால கதையாகவும், திரைக்கதை பெரிய அளவில் வலுவாக அமையாததும், இது தோல்வி அடைய ஒரு காரணமாகும்.

ரூ.35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.20 கோடி  மட்டுமே வசூல் செய்துள்ளது.

Leave a Comment