விஜயின் அரசியலை பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்… நான் பொய்யன் ஆக விரும்பவில்லை என நழுவிய வைரமுத்து…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். அதன் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜய்.…

vijay

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். அதன் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜய்.

1990களில் தமிழ் சினிமாவில் தனது 18 ஆவது வயதில் நாயனாக அறிமுகமான விஜய் ஆரம்பத்தில் குடும்பக் கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு சமூக நீதி கருத்துக்கள் கொண்ட படங்களில் நடித்து பிரபலமானார். 2010 காலகட்டத்திற்கு பிறகு விஜய் திரைப்படங்கள் வெளிவந்தாலே ஹிட்தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியிலும் வசூல் சாதனை படைக்கும் வெற்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த போதும் தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அரசியளில் களமிறங்க போவதாக கூறி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதன் பணிகளை செய்து வருகிறார் விஜய். ஏற்கனவே கமிட்டான படமான ஜனநாயகம் படத்தில் நடித்துவிட்டு முழு நேரமாக அரசியலில் இறங்குவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பல பிரபலங்களிடம் விஜயின் அரசியலை பற்றி கேட்கப்பட்டு வருகிறது. யாருமே விஜய்க்கு எதிராக பேசவில்லை.

அந்த வரிசையில் இன்று வைரமுத்துவிடம் பத்திரிக்கையாளர்கள் விஜயின் அரசியலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது வைரமுத்து பதில் கூறாமல் நான் உண்மையை கூறவில்லை என்றால் பொய்யன் ஆகி விடுவேன். நான் பொய்யனாகவும் விரும்பவில்லை என் நட்பையும் கெடுத்து கொள்ள விரும்பவில்லை. எல்லோரிடமும் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது என்று சரியான பதில் கூறாமல் நழுவி சென்று விட்டார்.