கவிப்பேரரசு வைரமுத்து எழுதி அவரே நடித்த பாடல். அவர் ஒரு சில விஷயங்களைத் தனது கொள்கையாக வைத்து இருந்தார். அவர் நடிப்பதில்லை. சினிமா தயாரிப்பதில்லை என்பது தான் அந்தக் கொள்கை.
அடுத்த வீடு தான் படம். ராமநாராயணன் இயக்கத்தில் சந்திரசேகர், எஸ்.வி.சேகர், இளவரசி உள்பட பலர் நடித்துள்ளனர். இது குடும்பப்பிரச்சனையை மையமாகக் கொண்ட படம்.
இதுல புருஷன் மனைவி உறவு தான் புனிதமானது. புரிந்து கொண்டு வாழ்வதே இனிமையானது என்பது தான் அந்தப் பாடல். இதை திருமண மேடைக்கு வந்து வைரமுத்து பாடுவார்.
இந்தப் பாடலைப் பாடியவர் மலேசியாவாசுதேவன். இசை அமைத்தவர் சங்கர் கணேஷ். இந்தப் பாடலில் பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி, பழஞ்சோறு அதுவே போதும் மனமே சங்கதி, போதும் என்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதின்னு முதல் பல்லவி வரும்.
இரு பெண்களும் படத்தில் இருக்கறதை விட்டுவிட்டு பறக்குறதுக்கு ஆசைப்படுவாங்க. அதற்காக எழுதப்பட்ட வரிகள் இவை.
முதல் சரணத்தில் குழப்பம் வந்தாலே அட உறக்கம் வராது. மனம் தெளிந்தாலே ஒரு மயக்கம் வராது. பூனை படுத்து கிடக்கும் இடத்தில் யானை தங்காது. எறும்பு கூட கரும்பை விரும்பி எடுத்துத் திங்காது. வீட்டுக்கு வீடு வாசப்படி… அமைகின்ற வாழ்வு ஆசைப்படி… அவனவன் ஜோடி ஜாடிக்கேத்த மூடி… என்று முதல் சரணம் இருக்கும். எறும்பு கூட கரும்பை விரும்பி எடுத்து சாப்பிடாது. எவ்வளவு அழகான கருத்து..?!
காட்டுக்குருவிக்கு சோளக்கருது மேல ஆசை. தோட்டக்காரிக்கு அந்தக் குருவி மேல ஆசை. பக்கத்து வீட்டுல உலை கொதிச்சு பசி அடங்காது. காவிரி போல நீரிருக்க கானலைத் தேடி நீ பறக்க மாலையிட்ட மானே, நாளை நன்மை தானே என்று பாடலை அழகாக எழுதி முடித்து இருந்தார் கவிப்பேரரசு வைரமுத்து.
ராமநாராயணன் இப்படி ஒரு பாட்டுக்கு கவிஞர் நடிக்கணும் என்று விடாமல் வைரமுத்துவிடம் கேட்கிறார். இது நடிப்பு எல்லாம் கிடையாது. நீங்க வைரமுத்தாகவே வந்து நடிங்க. வேற ஒண்ணும் கிடையாதுன்னு சொல்லவும் தான் வைரமுத்து ஒத்துக்கொண்டு படத்தில் நடித்தாராம்.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார். இந்தப்பாடல் பிறர் வீட்டைப் பார்த்துப் பொறாமைப்பட்டு புருஷனுடன் சண்டை பிடிக்கும் பெண்களுக்கு ஒரு பாடம்.