பழம்பெரும் நடிகைகளில் அழகும், திறமையும் வாய்ந்த நடிகைகள் பலர் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் வைஜெயந்திமாலா. இவர் நடனத்திலும் சிறந்தவர். இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக, தாய்க்குலங்களின் பேராதரவு பெற்றவர் இவர்.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் இவர் நடித்த படங்கள் எல்லாமே செம மாஸ்.
இவர் நடித்த வாழ்க்கை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தக்காலத்தில் இவர் நடித்த படங்கள் என்றாலே திரையரங்கில் கூட்டம் களைகட்டும். அந்தவகையில் வைஜெயந்திமாலாவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் நடந்தது. அது என்ன என்று பார்க்கலாமா…
இதையும் படிங்க… தம்பி விஜய் படத்தை போடுங்க என ஷாக் கொடுத்த தல அஜித்! அப்படி என்ன நடந்திருக்கும்?
இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் வித்தியாசமான காதல் மற்றும் காமெடி கலந்து எடுக்கப்பட்ட படம் தேன் நிலவு. ஜெமினிகணேசனும், வைஜெயந்திமாலாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்காக பல நாள்கள் காஷ்மீரில் சூட்டிங் நடந்தது.
ஸ்ரீநகரில் படப்பிடிப்பு நடந்தது. அங்குள்ள தால் ஏரியில் ஜெமினிகணேசனும், வைஜெயந்தி மாலாவும் விசைப்படகில் இருந்து வரும் இரும்பக்கயிற்றைப் பிடித்தபடி தண்ணீரில் ஸ்கீயிங் பண்ண வேண்டும். அப்படி ஒரு ரிஸ்கான காட்சியைப் படமாக்கினார்கள். யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கயிறு தளர்ந்தது. இதனால் நிலைகுலைந்த வைஜெயந்திமாலா தால் ஏரியில் விழுந்து விட்டார். உடனே கேமராமேன் வின்சென்ட் சட்டென்று தண்ணீரில் குதித்து இவரைக் காப்பாற்றினார்.
இருந்தாலும் இந்த விபத்தால் பெரிய பிரச்சனை ஆகி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. உடனே சிகிச்சைக்காக பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார் வைஜெயந்திமாலா. அங்கு ஒரு மாதம் ஓய்வு எடுத்தார். மீண்டும் தேனிலவு படத்தில் நடித்தார்.
இந்த விபத்தின் போது அவருக்கு சிகிச்சை அளித்தவர் மும்பை குர்லா பகுதியில் இருந்த ஒரு டாக்டர் தான். அவரது கிளினிக்கில் தான் வைஜெயந்திமாலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த டாக்டரின் பெயர் பாலி. ஆனால் அவரே பிற்காலத்தில் வைஜெந்திமாலாவைத் திருமணம் செய்து கொண்டார்.
தனது கணவரைப் பற்றி வைஜெயந்திமாலா இப்படி சொல்கிறார். என் மீது மிகுந்த அக்கறையும், பாசமும் கொண்டவர். என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். எல்லா விஷயங்களிலும் அவர் சிறந்தவர். மேன்மையானவர். எவ்வளவு ஒரு ஆத்மார்த்தமான அன்பு என்று பாருங்கள்.
10.3.1968 அன்று சென்னை ஆழ்வார்பேட்டை பங்களாவில் முதல் மாடியில் உள்ள பெரிய ஹாலில் தான் இவர்களது திருமணம் நடந்தது. இதில் ஒய்.ஜி.பார்த்தசாரதி, பி.ஆர்.சோப்ரா, சிவாஜி, ஜானகி எம்ஜிஆர் உள்பட பல விஐபிக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.