பெரும் எதிர்பார்ப்புக்களுக்கிடையில் கடந்த வருடம் வெளியாகி விமர்சனத்திலும், வசூலிலும் வெற்றி பெற்ற படம்தான் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். வெகு நாட்களுக்குப் பிறகு வடிவேலு நடித்த படம் என்பதாலும், முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் என்பதாலும், ஏ.ஆர்.ரகுமான் இசை, மாரி செல்வராஜ் இயக்கம் என படம் எதிர்பார்ப்பைக் கூட்டி அதை நிவர்த்தியும் செய்தது.
“கேப்டன் கையால புத்தாண்டுக்கு காசு வாங்க முடியல..“ நினைவிடத்தில் நடிகர் செஞ்ச தரமான சம்பவம்
வடிவேலுவுக்கு லைப் டைம் செட்டில்மென்ட் படமாக மாமன்னன் அமைந்து விட்டது. தலித் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் பல விருதுகளையும் அள்ளிக் குவித்து வருகிறது. இதில் பகத் பாசில் நடித்த ரத்ன வேலு கதாபாத்திரம் அனைத்து சாதியினரிடமும் எளிதாகச் சென்று சேர்ந்தது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்த சாதி வழக்கம் இந்தப் பாத்திரத்தால் மீண்டும் உயிர் பெற்றது.
எதை ஒழிக்க மாரி செல்வராஜ் இப்படத்தை எடுத்தாரோ அதுவே மீண்டும் முளை விட்டது. இதனால் ஏற்பட்ட சர்ச்சையும் ஏராளம். இந்நிலையில் வடிவேலுவும், பகத் பாசிலும் மீண்டும் இணையும் படத்திற்கான அப்டேட் வெளியாகி உள்ளது. பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்து, கே.எஸ். ரவிக்குமார், விக்ரமன், சசி, எழில், லிங்குசாமி போன்ற இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தனது நிறுவனத்தின் 98-வது படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் வடிவேலுவும், பகத் பாசிலும் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில் மலையாள இயக்குநர் சதீஷ் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இதர தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியலும் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா மறக்காத 16 வயதினிலே டாக்டர்.. நடிப்பில் பின்னியும் நடிகர் வாழ்வில் நிறைவேறாத ஆசை..
ஏற்கனவே இவர்கள் காம்போவில் வந்த மாமன்னன் பெரும் வெற்றி பெற்றதால் தற்போது மீண்டும் அதுவும் சூப்பர் குட்பிலிம்ஸ் போன்ற பிரம்மாண்ட பேனருடன் இணைவதால் படத்தின்மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாகியுள்ளது. மாமன்னனுக்குப் பிறகு காமெடி கதாபாத்திரங்களை வடிவேலு தவிர்த்து நடிப்பார் என்ற பேச்சுகள் உலவி வந்த நிலையில் இப்படத்தில் இவர்களது கதாபாத்திரம் மீண்டும் ரத்னவேலு-மாமன்னன் போலவே இருக்குமா என ரசிகர்கள் ஆருடம் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.