கேப்டன் கையால புத்தாண்டுக்கு காசு வாங்க முடியல.. நினைவிடத்தில் நடிகர் செய்த செயல்!

இந்த வருட இறுதியில் கேப்டன் விஜயகாந்த் மறைவு செய்தி ஒட்டு மொத்த தமிழகத்தையே உலுக்கிப் போட்டது. ஒவ்வொரு வரும் கேப்டன் விஜயகாந்த் பற்றிய நினைவலைகளை நினைவு கூர்ந்து வருகின்றனர். இதில் குறிப்பிடத் தகுந்தது என்னவென்றால் அவரது சினிமா பயணத்தைப் பற்றியோ அல்லது அரசியல் வாழ்க்கையைப் பற்றியோ யாரும் அவ்வளவாகக் கூறவில்லை. பெரும்பான்மையான தொண்டர்களும், இரசிகர்களும் கூறுவது அவரது மனிதாபிமானம் மற்றும் இரக்க குணத்தையே.

இப்படியும் ஒரு மனிதர் வாழ முடியுமா என்று மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து கலியுக கர்ணணாகவே மறைந்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். தினசரி அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். வெளிநாடுகளில் ஷுட்டிங்கில் இருந்த நடிகர்களும் தாயகம் திரும்பி அவரது நினைவிடத்தில் தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

கேப்டன் விஜயகாந்தின் மறைவு நிகழ்வில் ஆரம்பம் முதல் இறுதிவரை பம்பரமாக சுழன்று இறுதி ஊர்வலப் பணிகளை மேற்ககொண்டவர்  நடிகரும், தேமுதிக நிர்வாகியுமான மீசை ராஜேந்திரன். இவர் விஜயகாந்தின் கொடைத் தன்மை பற்றிக் கூறும் போது, “ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு அன்று கேப்டன் கையால் புதிய 100 ரூபாய் நோட்டு வாங்குவது வழக்கம். ஆனால் இந்த வருடம் அது நிறைவேற வில்லை. அதனால் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில 100 ரூபாயை வைத்து வழிபட்டு எடுத்துச் செல்கிறேன். இதை அவரே கொடுத்தது போல் நினைத்துக் கொள்கிறேன். அவருடைய மனித நேயமும், தான தர்மமும் தான் அவருக்கு இப்படி ஒரு புகழைக் கொடுத்தது.“ என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

பயங்கர போட்டியாக இருக்கும் போலயே.. பொங்கல் ரீலிஸ்-ல் சூப்பர் ஸ்டாருடன் மோத களமிறங்கும் திரைப்படங்கள்

மேலும், எதிரிக்கு கூட கஷ்டம் வந்த உதவ வேண்டும் என்பது கேப்டனின் குணம். அவரிடம் இருந்து மனித நேயம், தர்மம், தைரியம், எப்படி பழக வேண்டும், மரியாதை தர வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை நான் நிறைய கற்றுள்ளேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்து மறைந்தவர்களின் அஞ்சலிக்காக கூடும் கூட்டத்தைப் போல் எந்த அதிகாரத்திலும் இல்லாமல் மக்கள் மனதில் தான் செய்த தர்மத்தால் நிலைத்து இறப்பிலும் தான் யாரென்று நிரூபித்து விட்டார் கேப்டன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews