ஒரே பாடல்.. ரஜினி, இளையராஜா என ரெண்டு பேரையும் பாராட்டும் படி வாலி எழுதிய வரிகள்… சும்மாவா ஹிட்டு ஆச்சு..

தற்போது தமிழ் சினிமாவில் வரும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என அனைத்திலும் ட்ரெண்டிங் ஆகி ரீல்ஸிலும் கூட கவனம் ஈர்த்து வந்தாலும் அதில் இருக்கும் வரிகள் தொடர்பான…

Vaali Magic in Mannan Song

தற்போது தமிழ் சினிமாவில் வரும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என அனைத்திலும் ட்ரெண்டிங் ஆகி ரீல்ஸிலும் கூட கவனம் ஈர்த்து வந்தாலும் அதில் இருக்கும் வரிகள் தொடர்பான விமர்சனங்கள் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது. பெரும்பாலான பாடல்களில் மிக குறைந்த பாடல்கள் வரியில் அர்த்தத்தை சொல்வதுடன் மட்டுமில்லாமல் படத்தின் கதை ஆத்மாவையும் ரசிகர்கள் மனதிற்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்திருக்கும்.

ஆனால் பெரும்பாலான பாடல்கள் இளசுகளை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தாலும் அதில் வரும் வரிகள் படத்தின் ஆழத்தையோ அல்லது அந்த சூழலுக்கு ஏற்ற வரிகளாகவோ இல்லாமல் வெறுமனே டிரெண்டிங் என்ற பெயரில் வார்த்தைகளை பயன்படுத்துவதாகவே இருந்து வருகிறது. இப்படி வெளியாகும் பாடல்கள் குறிப்பிட்ட காலம் தாண்டி ஹிட்டாகுமா என கேட்டால் சந்தேகம் தான்.

ஆழமாக பாதித்த வரிகள்

ஆனால் அந்த காலத்தில் எல்லாம் உருவான பாடல்கள் ஒவ்வொன்றும் படத்தின் கதையையே சொல்லும் அளவுக்கு வரிகள் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் மட்டுமில்லாமல் அந்த பாடலின் சூழல் மகிழ்ச்சியாக இருந்தால் நம்மை கேட்பவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும். அதே போல வருத்தத்தை எடுத்துரைக்கும் வகையில் இருந்ததால் அந்த வரிகள் நம்மையும் கலங்க வைக்கும்.
Vaali and Ilaiyaraaja

இப்படியாக ரசிகர்களை ஒன்றி போக வைக்கும் அளவுக்கான வரிகள் அந்த காலத்தில் இடம்பெற்று வந்தது. அந்த வகையில் வாலி மற்றும் இளையராஜா ஆகியோரின் காம்பினேஷனில் உருவாகி, ஹிட்டடித்த பாடல்களும் இங்கே ஏராளம். அப்படி ஹிட்டான பாடலில் வாலி எழுதிய வரிகளின் பின்னணியை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.

ராஜாதி ராஜா..

பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, விஜயலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்த திரைப்படம் தான் மன்னன். இதில் வரும் ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் என்ற பாடலில் இளையராஜா நான்கு வெவ்வேறு விதமான டியூன்களை அமைத்திருப்பார். ஆனால் இதனை பாடும் எஸ்பிபி மற்றும் சொர்ணலதா ஆகியோர் ஒரே ஸ்டைலில் முழுவதுமாக பாடினாலும் பின்னால் வரும் தாளம் மாறிக்கொண்டே இருப்பது இன்றளவிலும் பலருக்கு வியப்பை தான் கொடுத்து வருகிறது.

இந்த பாடலின் ட்யூனை வாலியிடம் இளையராஜா கொடுத்ததும் ராஜாவை குறிப்பிடும் வகையிலும் அதே நேரத்தில் அந்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் மற்றும் ரஜினியை தனிப்பட்ட முறையிலும் சொல்லும் வகையிலும் நடிகையின் குரலில் பாடுவது போல ஒரு வரியை அமைத்திருப்பார் வாலி. இப்படி ஒரு டியூனை இளையராஜா உருவாக்கியதற்காகவே வியந்து போய் முதல் வரியே ‘ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்’ என இளையராஜாவுக்கும் படத்தில் ரஜினி கதாபாத்திரத்திற்கும், ரஜினியின் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்திற்கும் என அனைத்திற்கும் ஒன்றிப்போகும் வகையில் இந்த வரியை எழுதியிருப்பார் வாலி.
Raajathi Raja Song Mannan

இப்படி ஒரே வரியில் பலரைக் குறிப்பிட்டு எழுத முடியுமா என்பது பலருக்கும் நிச்சயம் வியப்பான விஷயம் தான்.