கமல் படத்துடன் தனுஷ் படம் மோதுகிறது என்ற தகவல் வந்துள்ளது. கமல் எவ்வளவு பெரிய சீனியர் நடிகர், தனுஷ் சின்ன நடிகர் என்றும் இந்தப் படங்கள் ஒரே நாளில் வருவதால் கமல் படத்துடன் ஒப்பிடக்கூடாது என்று கமல் ரசிகர்கள் வரிந்து கட்டிக் கொண்டு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் தனுஷ்சும் வேக வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நடிகர்.
இவரும் பாலிவுட் வரை படங்களில் நடித்துக் கலக்கியுள்ளார். முற்றிலும் மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்து கலக்கி வருகிறார். சமீபத்தில் வந்த கேப்டன் மில்லர் அதற்கு முன் வந்த அசுரன் படங்களே இதற்கு சாட்சி. அதே போல் இளையராஜாவின் பயோபிக்கிலும் அச்சு அசல் அவரைப் போலவே நடித்து வருவதாலும் இவரது மார்க்கெட் எகிறி வருகிறது.
இதையும் படிங்க… அப்பாட…. ஒருவழியாக வந்துவிட்ட விக்ரம் பட ரிலீஸ் தேதி… இதுவாவது நடக்குமா?
இந்த நிலையில் கமல் படமான இந்தியன் 2 வுடன், தனுஷ் இயக்கி நடிக்கும் ரயான் படமும் மோத உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் தான். இருவருமே பன்முகத்திறன் கொண்ட கலைஞர்கள். தனுஷின் 50வது படம் என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அதே போல ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கமான இந்தியன் படத்தின் 2ம் பாகம் முதல் பாகத்தின் வெற்றியைப் போலவோ, அதையும் தாண்டி பிரமாதமாகவோ அமையக்கூடும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இரு படங்களுமே மே 16ல் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தக் லைப் படத்தோட சூட்டிங் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தொடங்க உள்ளது. துல்கர்சல்மானுக்குப் பதில் சிம்பு வருகிறார். கமல் 3 கெட்டப்பா 3 கேரக்டரா என்று தெரியவில்லை. ஜெயம்ரவிக்குப் பதிலாக அரவிந்தசாமி, லிவின்பாலி என இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அந்தப்படத்தோட எடிட்டிங் எல்லாம் பார்த்துவிட்டு படக்குழுவினரே மிரண்டு விட்டார்களாம்.
பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 AD படத்துக்கு நெட்பிளிக்ஸ்ல பெரிய வியாபாராம் ஆகப்போகுதுன்னு நினைச்சாங்களாம். ஆனா கமல் கெஸ்ட் ரோல் தான் பண்றேன்னு சொன்னதும் பிசினஸ் எல்லாம் மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இதனால் மிகப்பெரிய இழப்புகள் வரும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


