சிம்ரன் தயாரிப்பில் விஜய் நடிக்க இருக்காரா? இது புதுசால இருக்கு.. ஒரு வேளை தளபதி 69 இருக்குமோ?

By Chandra R

Published:

தமிழ் சினிமாவில் ஆல் டைம் ஃபேவரைட் ஜோடி என்றால் அது விஜய் மற்றும் சிம்ரன்தான். இருவரும் சேர்ந்து 4 அல்லது5 படங்களில் ஜோடியாக நடித்திருக்கின்றனர். இவர்கள் இணைந்து நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். அதிலும் படத்தில் அமைந்த பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பாடல்களாகும்.

இருவருக்குமே டான்ஸ் என்றால் அத்துப்பிடி. திரையில் இருவரின் டான்ஸையும் ஒன்றாக பார்க்கும் போது ஆடாதவர்களே இருக்கமாட்டார்கள். குறிப்பாக ஆல்தோட்டா பூபதி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு விஜயுடன் சேர்ந்து நடனம் ஆடியிருப்பார் சிம்ரன். அதுதான் இப்போது வரைக்கும் அனைவருக்கும் ஃபேவரைட்டான சிம்ரன் விஜய் பாடலாகவே மாறியிருக்கிறது.

துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே போன்ற படங்களில் இவர்களின் ஜோடி பொருத்தம் பிரமாதமாக இருக்கும். சிம்ரனின் லக்கியான ஆன் ஸ்கிரீன் பேர் என்றால் அது விஜய் மட்டும்தான். அதை போல் விஜய்க்கும் பெஸ்ட் ஆன் ஸ்கிரீன் பேர் என்றால் அது சிம்ரன் மட்டும்தான்.

விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்க்காகவே ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸ் பண்ணியிருந்தார் சிம்ரன். அதை யாராலும் இன்று வரை மறக்க முடியாது. அந்தளவுக்கு விஜய் மீது சிம்ரனுக்கு ஒரு மரியாதை இருந்து வருகிறது. சினிமாவில் அறிமுகமானதே விஜய் படத்தில்தான்.

அந்தளவுக்கு சிம்ரனுக்கும் விஜய்க்கும் இடையே ஒரு நெருக்கமான பாண்டிங் இருந்து வருகிறது. இந்த நிலையில் சிம்ரன் இப்போது ஒரு தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார். ஆழம் தெரிந்தே காலை விட்டிருக்கிறார் சிம்ரன். இருந்தாலும் தான் தயாரிக்கும் முதல் படம் விஜயின் படமாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்திருக்கிறார் சிம்ரன்.

அதனால் விஜயிடமே போய் எனக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என சமீபத்தில் கேட்டதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் விஜய் மிகவும் டீசண்டாக சொல்லிவிட்டிருக்கிறார். அதாவது என் படம் ரிலீஸ் சமயத்தில் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். அதனால் அதை சமாளிக்க உங்களால் முடியாது. அதனால் ஹேப்பியா விடுங்க என சொல்லி அனுப்பிவிட்டாராம் விஜய்.

மேலும் உங்களுக்காக...