விஜய்யின் லியோ பட வாய்ப்பை தவற விட்ட உதயநிதி! இதுவும் போச்சா….

By Velmurugan

Published:

விஜய் நடிக்கும் லியோ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு கொடுக்கப்படவில்லை என்கிற தகவல் தற்போழுது வெளியாகி உள்ளது.

பான் இந்திய அளவில் ரிலீசாக உள்ள நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் தமிழ், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

லியோ படத்தின் சூட்டிங் இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில் இப்படத்திற்கான பிஸ்னஸ் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முன்னதாகவே படத்தின் ஓடிடி, ஆடியோ மற்றும் சேட்டிலைட் உரிமைகள் பெரும் தொகைக்கு விற்பனையாகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. லியோ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் 125 கோடிக்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கி ரிலீஸ் செய்து வருகிறது. ஆனால் விஜய் படக்குழுவினர் மட்டும் இந்த நிறுவனத்துடன் தன் படங்களை கொடுக்க விரும்பவில்லை என தகவல் தெரிவிக்கிறது.

ஏற்கனவே வாரிசு படத்தை 7 ஸ்கிரீன் லலித்திற்கு கொடுத்தது போல இந்த படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு தராமல் ஏஜிஸ் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன விடுதலை ஹீரோயின்! பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணமோ …

இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமம் குறித்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படத்தை ஏஜிஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.