இது பெயரில்லா கோழைத்தனம்… த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவால் பரபரப்பு…

த்ரிஷா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றி இருக்கிறார். இவரது இயற்பெயர் அனுராதிகா என்பதாகும். ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த…

trisha

த்ரிஷா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றி இருக்கிறார். இவரது இயற்பெயர் அனுராதிகா என்பதாகும். ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த த்ரிஷாவிற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

1999 ஆம் ஆண்டு ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் த்ரிஷா. 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் த்ரிஷா. தொடர்ந்து சாமி, லேசா லேசா, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, உனக்கும் எனக்கும், கிரீடம், பீமா, அபியும் நானும், சர்வம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் த்ரிஷா.

2010 காலாக்கப்பட்டதிற்கு பிறகு பின்தங்கிய நிலைமையில் இருந்த திரிஷா 96 படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார். அதற்கு பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு பேரும் புகழும் பெற்று தந்தது. தற்போது நயன்தாராவை பின்னுக்கு தள்ளி பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் த்ரிஷா.

இந்நிலையில் திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் குழப்பம் அடைந்திருக்கிறார்கள். அவரது இன்ஸ்டா பக்கத்தில் தவறாக கமெண்ட் பதிவிடுபவர்களையும் டாக்ஸிக்காக பேசுபவர்களையும் அவர் குறிப்பிட்டு அந்த பதிவில் கூறியிருக்கிறார். அதில் டாக்ஸிக் மக்களே மற்றவர்களை பற்றி அர்த்தமற்ற பேச்சுகளை பேசிய பிறகு எப்படி உங்களால் நிம்மதியாக இருக்க முடிகிறது தூங்க முடிகிறது. எப்படி அடுத்தவர்களை பற்றி தவறாக கமென்ட் செய்வது தான் உங்கள் வாழ்க்கையை அந்த நாளை சிறப்பாக்குகிறதா? உங்களையும் உங்களையும் சுற்றி இருப்பவர்களையும் நினைத்து நான் வருத்தப்படுகிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார் த்ரிஷா.