Thug Life படத்தில் ஒரு மேஜிக் இருக்கு… த்ரிஷா ஓபன் டாக்…

த்ரிஷா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றி இருக்கிறார். இவரது இயற்பெயர் அனுராதிகா என்பதாகும். ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த…

trisha

த்ரிஷா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றி இருக்கிறார். இவரது இயற்பெயர் அனுராதிகா என்பதாகும். ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த த்ரிஷாவிற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

1999 ஆம் ஆண்டு ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் த்ரிஷா. 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் த்ரிஷா. தொடர்ந்து சாமி, லேசா லேசா, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, உனக்கும் எனக்கும், கிரீடம், பீமா, அபியும் நானும், சர்வம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் த்ரிஷா.

2010 காலாக்கப்பட்டதிற்கு பிறகு பின்தங்கிய நிலைமையில் இருந்த திரிஷா 96 படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார். அதற்கு பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு பேரும் புகழும் பெற்று தந்தது. தற்போது நயன்தாராவை பின்னுக்கு தள்ளி பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் த்ரிஷா.

இந்நிலையில் Thug Life திரைப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட த்ரிஷா அந்த படத்தின் அனுபவங்களை பற்றி பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நானும் சிம்புவும் நடித்தது போல மற்றொரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டார்கள். அப்படி ஒரு மேஜிக் Thug life படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள் என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி செய்தியாக கூறியிருக்கிறார் த்ரிஷா.