இன்று பின்னணி பாடகி வாணி ஜெயராம் 74வது பிறந்த நாள்

By Staff

Published:

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷமான பாடகிகளில் வாணி ஜெயராம் அவர்களின் பாடல்கள் ஒவ்வொன்றும் நல் முத்து என்று சொன்னால் மிகையாகாது.

6adb9d7b7f7ec084350c0135a2597c43

மிக இனிமையான குரலை கொண்டவர் வாணி ஜெயராம் அவர்கள். சங்கீதத்தையும் ஞானத்தையும் நமக்கு அளிப்பவள் கலைவாணி சரஸ்வதி அப்படிப்பட்ட பெயரை இயற்பெயராக கொண்ட வாணி ஜெயராம் அந்த பெயருக்கேற்றபடியே அபார ஞானத்துடன் விளங்கினார்.

1945ம் ஆண்டு தமிழ் நாட்டின் வேலூரில் பிறந்த வாணி ஜெயராம் தமிழில் தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் அறிமுகமானார் . மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடலின் மூலம் எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் அறிமுகமான இவர் பல்வேறுவிதமான அழகான பாடல்களை பாடியவர்.

சங்கர் கணேஷ் இசையில் இவர் பாடிய பாலைவனச்சோலை படத்தில் இடம்பெற்ற மேகமே மேகமே என்ற பாடல் 80களின் பொக்கிஷமான பாடலாக இருந்தது.

சரித்திர கால பாடலுக்கு இவர் குரல் ஏற்றது போல் இருப்பதால் அந்தக்கால டைப் சிச்சுவேஷன் பாடல்களை இவரை வைத்து அதிகம் பாட வைத்திருப்பர்.

கன்னி ராசி படத்தில் இடம்பெற்ற பாகவதர் டைப் பாடலான சுகராகமே பாடலை இவரை வைத்து பாட வைத்திருப்பர்.

அதே போல ராஜ ரிஷி படத்தில் இடம்பெற்ற மான் கண்டேன் மான் கண்டேன் பாடலும் இவர் பாடியதில் புகழ்பெற்ற பாடல் ஆகும்.

எம்.எஸ்.வி இசையில் அதிகம் பாடல்களை பாடியுள்ள இவர் அண்ணன் ஒரு கோவில் படத்தில் இடம்பெற்ற குங்குமக்கோலங்கள் கோவில் கொண்டாட போன்ற பாடல்களை பாடி நம்மை இசையால் வசப்படுத்தியவர் இவர்.

இது போல பல தமிழ் சினிமாவின் அந்தக்கால பேய் சீக்வன்ஸ் காட்சிகளுக்கு இவர்தான் பாடி இருக்கிறார்.

நூறாவது நாள் படத்தில் இடம்பெற்ற உருகுதே இதயமே அருகிலே வராய், , துணிவே துணை படத்தில் இடம்பெற்ற ஆகாயத்தில் தொட்டில் கட்டி பாடலும் இவர் பாடியதில் ஆவி பேய் சீக்வன்ஸ் பாடல்களாகும்.

இப்படி பல சிறப்புக்களை கொண்ட அம்மா வாணி ஜெயராம் அவர்களுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா.

Leave a Comment