சிவகார்த்திகேயன் தான் தற்போது தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளை அவரின் படங்கள்தான் மாதா மாதம் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவரின் நம்ம வீட்டு பிள்ளை வெளியானது.
பந்தயத்தில் ஜெயிக்க வாய்ப்புள்ள குதிரையான சிவகார்த்திகேயனை வைத்துதான் அதிக படங்கள் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படம் இன்று ரிலீஸ் ஆகிறது.
இரும்புத்திரைக்கு பிறகு மித்ரன் இயக்கத்தில் இப்படம் வெளிவருவதால் இரும்புத்திரையில் இருந்த பரபரப்பு இதிலும் இருக்கும் என எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்கள் ஏராளம்.
போஸ்கோ என்பவர் என்னுடைய கதை ஹீரோ என்று கூறி இருந்தார். இருப்பினும் இப்படம் இன்று ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.