டுவிட்டரில் தனது கருத்துக்களை வெளிப்படையாக அவ்வப்போது தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி கடந்த சில நாட்களாக குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்
மேலும் இந்த சட்டத்தில் உள்ள தனது சந்தேகத்தையும் நிறைகுறைகளையும் அவர் கூறிவருகிறார்
இந்த நிலையில் இன்று சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில், ’ஒருத்தர் பேசவே மாட்டேன்கிறாரு …. ஒருத்தர் பேசுறது என்னன்னே புரியல. என்ன வாழ்க்கைடா’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
இதனை அடுத்து கமல் ரஜினி ஆகிய இருவர் குறித்து தான் கஸ்தூரி தெரிவித்து உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்.
குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து கமல் கூறிவரும் கருத்துக்கள் பலருக்கும் புரியாத நிலையில், ரஜினி இதுகுறித்து இன்னும் வாயை திறக்காத நிலையில், கமல் ரஜினி ஆகிய இருவரைத்தான் கஸ்தூரி கூறியிருப்பார் என்று பலர் நினைக்க தோன்றுகிறது