தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலங்களில் இருவருக்கும் பாடல்களில் மிகப்பெரிய ஹிட் கொடுத்வர் டி.எம். சௌந்தரராஜன். இவரின் பாடல்களுக்கு சிவாஜியின் வாய் அசைப்பு மிகப் பொருத்தமானதாக இருக்கும். நிஜமாகவே சிவாஜிதான் பாடுகிறார் என்று ஏமாந்தவர்கள் பலர். அந்த அளவிற்கு இருவரது குரலும் ஒற்றுமையாக இருக்கும். அதேபோல் எம்.ஜி.ஆர்-க்கும் பல ஹிட் பாடல்களைப் பாடி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தினை உருவாக்கியருந்தார் டி.எம்.சௌந்தரராஜன்.
ஆனால் ஒரு படத்தில் தான் பாடிய பாடல் ”இவருக்கா.. அப்போ தேறாது!” என்று கூறியவரை எம்.எஸ்.வி அவரையே முதலில் நடிக்க வைத்து பின்னர் ஹீரோவை ஆட வைத்தார். அந்தப் படம்தான் சர்வர் சுந்தரம். அந்தப் படத்தில் இடம்பெற்ற அவளுக்கென்ன அழகிய முகம் பாடலைப் பற்றித்தான் டி.எம்.எஸ். இவ்வாறு கூறினார்.
ஏ.வி.எம் தயாரிப்பில் 1964-ம் ஆண்டு வெளியான படம் சர்வர் சுந்தரம். காமெடி நடிகரான நாகேஷ் நாயகனாக நடித்த இந்த படத்தில் முத்துராமன், கே.ஆர்.விஜயா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.
தனக்கு அழகில்லை என்று நினைத்துக்கொண்டு தாழ்வுமனப்பான்மையில் இருக்கும் ஒருவன் சினிமாவில் எப்படி சாதித்தான் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு கே.பாலச்சந்தர் திரைக்கதை அமைக்க கிருஷ்ணன் பஞ்சு இயக்கி இருந்தார். ஏ.வி.எம் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன என்ற பாடலில், பாடகர் டி.எம்.சௌந்திரராஜன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், மற்றும் இசைக்கலைஞர்கள் பலர் வந்திருப்பார்கள். அதேபோல் நாகேஷ் நடிகையுடன் நடனமாடும் காட்சி படமாக்கப்படுவது போல் காட்டியிருப்பார்கள்.
இந்த பாடலை பாடிய டி.எம்.சௌந்திரராஜன் படலை பாடிவிட்டு இந்த பாடல் யாருக்கு என்று கேட்டுள்ளார். படத்தில் நாகேஷ்க்கு தான் இந்த பாட்டு என்று தயாரிப்பு குழு சொல்ல, இந்த பாடலை ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த பாடல் திரையில் வரும்போது தியேட்டரில் ஆடியன்ஸ் வெளியே வந்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.
டி.எம்.எஸ் சொன்னதை முடியடிக்க வேண்டும் என்பதற்காக அவரையே படத்தில் பாடல் பாடுவதுபோல் வர வைத்து கூடவே எம்.எஸ்.வி கம்போசிங் செய்வது போல் வைத்து பாடலை வெற்றி பெற வைத்துள்ளதாக தயாரிப்பாளர் ஏ.வி.எம்.குமரன் கூறியுள்ளார்.