அடமானத்திற்குச் சென்ற பிரபல கவிஞர் வீடு..மீட்டுக் கொடுத்த எம்.ஜி.ஆர்-ன் பாதத்தில் பத்திரத்தை வைத்த சம்பவம்!

கவியரசர் கண்ணதாசன், பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் சினிமாவில் பாடல்களை இயற்றி உச்சியில் இருந்த நேரம் அது. ஒருவர் காதல், தத்துவம் என எழுதிக் கொண்டிருக்க பட்டுக்கோட்டையாரோ புரட்சிப்பாடல்களை எழுதி ரசிகர்களைக் கவர்ந்தனர். இவர்கள் இருவர் பாணியிலும் காதல், தத்துவம், புரட்சி என அனைத்துக் களங்களிலும் பாடல்களை இயற்றி பிரபலமானவர் தான் கவிஞர் புலமைப் பித்தன். கோவையில் பிறந்த இவர், ஜவுளித் தொழிலில் ஈடுபட்டு பின் சென்னையில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

அதன்பின், கவிதை எழுவதில் நாட்டம் கொண்டு திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். அப்போது தான் அவருக்கு எம்.ஜி.ஆர். நடித்த குடியிருந்த கோயில் படத்தில் நான் யார்.. நான் யார்.. நீ யார் என்ற பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. ஒருமுறை எம்.ஜி.ஆர் செய்த உதவியால் அவர் பாதம் பணிந்து வணங்கினார் புலமைப்பித்தன்.

சிறுவயதில் கோவை பள்ளப்பாளையம் கிராமத்தில் புலமைப் பித்தனின் குடும்பத்துக்கு சொந்தமான வீட்டை அவரது தந்தையும் அண்ணன்கள் இருவரும் சேர்ந்து அடமானம் வைத்து பணம் வாங்கினர்.ஆனால் அடுத்த ஆண்டே அவரது தந்தை இறந்து போனார். குறிப்பிட்ட தேதிக்குள் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கத் தவறினால், கடன் கொடுத்தவருக்கே வீடு சொந்தமாகிவிடும்.

அப்போது, படங்களில் புலமைப் பித்தன் ஒருசில பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த காலம். பேர் இருந்த அளவுக்கு பணம் இல்லை. பல நாட்கள் தயக்கத் துக்குப் பின் ஒருநாள், வாஹினி ஸ்டுடி யோவில் படப்பிடிப்பு முடிந்து ஒப்பனை அறைக்குச் சென்ற எம்.ஜி.ஆருடன் கூடவே புலமைப்பித்தனும் சென்றார். அவர் ஏதோ சொல்ல நினைப்பதை குறிப்பால் உணர்ந்தார் எம்.ஜி.ஆர்.! தன்னுடன் உள்ளே வந்த புலமைப் பித்தனைப் பார்த்து சிரித்தபடியே, ‘‘என்ன?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

தனது வீடு அடமானத்தில் இருப்பதை யும் குறிப்பிட்ட தேதிக்குள் பணம் கொடுக் கத் தவறினால் பூர்வீக வீடு கையை விட்டுப் போய்விடும் என்பதையும் ஒருவழியாக திக்கித் திணறிக் கூறினார் புலமைப்பித்தன்!

கிளைமேக்ஸ் பாடலை டைட்டில் கார்டில் போட்ட இயக்குநர்.. கண்டபடி திட்டிய இளையராஜா.. ஆனாலும் ஹிட்தான்!

‘‘நான் பணம் தருகிறேன்’’ அடுத்த விநாடி பதில் வந்தது எம்.ஜி.ஆரிடம் இருந்து! ‘‘இல்லண்ணே, நீங்க எனக்கு பாட்டு மட்டும் கூடுதலாக கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றார் புலமைப் பித்தன். ‘‘பாட்டும் தரேன், பணமும் தரேன். ஏன் நான் பணம் தரக்கூடாதா? உங்கள் கடமையில் எனக்குப் பங்கில்லையா? என்னை ஏன் நீங்க வேறாக நினைக் கணும்?’’ என்று அன்புடன் கடிந்து கொண்டார் எம்.ஜி.ஆர்.!

பின்னர், அவர் கொடுத்த பணத்தில் வீட்டை மீட்டு, அதற்கான பத்திரத்துடன் சென்னை திரும்பி படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரை புலமைப்பித்தன் சந் தித்தார். பத்திரத்தை அவர் காலடியில் வைத்து வணங்கக் குனிந்த புலமைப்பித்தனின் தோள்களை ஆதரவாகப் பற்றி எம்.ஜி.ஆர். அணைத்துக் கொண் டார். தன் பெற்றோர் வாழ்ந்த நினைவுச் சின்னத்தையும், இழக்க இருந்த கவுரவத்தையும் மீட்ட நிம்மதியில் புலமைப்பித்தன் கண்கலங்க நின்றார்!

அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது, ஆரம்ப காலத்தில் இருந்தே உடன் இருந்தவர்களில் புலமைப்பித்தனும் ஒருவர். எம்.ஜி.ஆர். முதல்வரான பின்னர், சட்டமேலவை உறுப்பினராக புலமைப்பித்தனை நியமித்தார். பின்னர், சட்டமேலவை துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார். மேலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் புலமைப்பித்தன் பதவி வகித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.