விஜய்யின் இந்த வெற்றி படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரம்பாவா? இப்போ ஃபீல் பண்ணி என்ன பண்ணுறது?

Published:

தமிழ் சினிமாவில் இன்றைய கால கட்டத்தில் பல நடிகைகள் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். மேலும் இந்த லிஸ்ட் மிகவும் பெரிதாகி கொண்டே தான் செல்கிறது. காரணம் அந்த அளவிற்க்கு தமிழ் சினிமாவில் புதிய நடிகைகளின் வரவேற்பு அதிகமாகிவிட்டது.

இந்நிலையில் 90ஸ்-களில் இளைஞர்களின் கனவு கன்னியாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வலம் வந்தவர்தான் நடிகை ரம்பா. இவர் 1996 ஆம் ஆண்டு வெளியான உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதை அடுத்து கமல், ரஜினி, பிரசாந்த், விஜய் என பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். 2019 தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

லியோ படத்தின் 2-வது எப்போது தெரியுமா? இன்னும் அவளோ நாள்கள் வெயிட் பண்ணனுமா?

விஜய் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படம் மாபெரும் வெற்றி பெற்றது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இப்படத்தில் ஹீரோயினாக நடித்த சிம்ரன் ரசிகர்களை கவர்ந்திருப்பார். ஆனால் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு முதலில் நடிகை ரம்பாவுக்கு தான் கிடைத்தது.இந்த படத்தில் சில காரணங்களால் நடிகை ரம்பாவள் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது

ரம்பா இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததும் பின்னர் அந்த வாய்ப்பு நடிகை சிம்ரன் பக்கம் சென்றது. அதை நன்றாக பயன்படுத்தி கொண்ட நடிகை சிம்ரன் இப்படத்தில் நடித்து அசத்தி இருப்பார். இப்படம் 90ஸ் கிட்ஸ் களின் வாழ்க்கையில் இன்னும் மறக்க முடியாத படமாக இன்றளவும் பேசப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...