பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் விருதுகள் வழங்கினார் கமல் ஹாசன்.
இதில், முகென் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு டிராபி மற்றும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2 வது பரிசினை சாண்டி வென்றார்.
பிக் பாஸ் முகினைத் தேர்வு செய்தாலும் பெரும்பாலான மக்களால் டைட்டில் வின்னராக ஆரம்பம் முதலே கொண்டாடப்பட்டுவந்தவர் தர்ஷன்.
அதிர்ச்சியளிக்கும்விதமாக, பிக் பாஸ் முடிவதற்கு ஒரு வாரம் முன்னதாக இவர் எவிக்ட் ஆகிப் போனார், பலரும் இவரது வெளியேற்றத்திற்கு கண்ணீர் சிந்தினர்.
கமல் ஹாசனும் தர்சனுக்கு, தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க வாய்ப்பு அளித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் தர்ஷன் பிகில் படத்தின் வெறித்தனம் பாடலுக்கு டான்ஸ் ஆடி அதை யுடியூப்பில் விட்டுள்ளார். தற்போது அது அதிக அளவில் பார்வையாளர்களைக் கொண்ட வீடியோவாக வெளிவந்து கொண்டிருக்கிறது.