பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பெரிய அளவில் பிரபலமாகிப் போனவர்கள் கவினும் லாஸ்லியாவும் தான். அவர்கள் காதல்தான் அவர்களை பைனல் வரை கொண்டு சென்றது.
கவின் ஆர்மியினரும், லாஸ்லியா ஆர்மியினரும் லாஸ்லியா டைட்டிலை வின் பண்ண வேண்டும் என்று மாங்கு மாங்கு என ஓட்டுப் போட்டனர். ஆனால் மக்கள் சரியான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறி, முகினை வெற்றியாளர் ஆக்கினர்.
நிகழ்ச்சி முடிந்தபின் பத்திரிக்கையாளர்களுக்கு லாஸ்லியா பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் கூறியது.” என் அம்மா அப்பாவின் திருமணம் காதல் திருமணம் ஆகும். அந்தக் கதையினை அவர்கள் எப்போதும் எங்களிடம் சொல்லியது உண்டு.
காதலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள், அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டமைக்கு காரணம் சமூகமே ஆகும். நிச்சயம் எனது திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன்தான் நடக்கும். அது குறித்த அறிவிப்பினை நிச்சயம் உங்களிடம் சொல்வேன்” என்று கூறியுள்ளார்.