கடலூர் நகரில் பிறந்து வளர்ந்தவர் வெற்றிமாறன். இவரது தந்தை கால்நடை மருத்துவர் மற்றும் இவரது தாயார் புதின எழுத்தாளர் ஆவார். தனது 15 ஆவது வயதிலிருந்தே சினிமாவின் மீது ஆர்வத்தை கொண்டிருந்தவர் வெற்றிமாறன். அதன் விளைவாக கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவில் நுழைய முடிவெடுத்தார் வெற்றிமாறன்.
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்தை கொண்ட வெற்றிமாறன் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இயக்குனர் பாலு மஹேந்திராவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். அவரிடம் திரைப்பட கலையை கற்றார் வெற்றிமாறன்.
ஆரம்பத்தில் 1999 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவான ‘காதல் நேரம்’ நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் பாலு மகேந்திராவின் ‘ஜூலி கணபதி’, ‘அது ஒரு கனாகாலம்’, இயக்குனர் கதிரின் ‘காதல் வைரஸ்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக திரையுலகில் பணியாற்றினார்.
2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ‘பொல்லாதவன்’ திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. 2011 ஆம் ஆண்டு மறுபடியும் தனுஷை வைத்து ‘ஆடுகளம்’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று தேசிய விருதுகளை வென்றது. தொடர்ந்து அசுரன், விடுதலை போன்ற பல வெற்றிப் படங்களை வெற்றிமாறன் இயக்கியும் தயாரித்தும் உள்ளார்.
தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட வெற்றிமாறன், சமூக நீதிப் படங்கள் மிகவும் முக்கியம், சமூக நீதியை சினிமாவில் பேசியதால் தான் இன்றளவும் சமூக நீதிக்கான போராட்டமும், தமிழ்நாட்டில் இருந்து சமூகநீதிக்கு எதிரானவர்களை நம்மால் எதிர்க்க முடிகிறது. அதுபோல சமூக நீதிகளை பேசும் படங்களை நாம் கண்டிப்பாக எடுக்கவேண்டும் ஆதரிக்கவேண்டும் என்று பேசியுள்ளார் வெற்றிமாறன்.