ஒரு மனிதன் பிறக்கும் போதே இந்தக் குணமும் வந்திடும்… அதை இல்லன்னு சொல்றவனை நம்பாத… செல்வராகவன் அட்வைஸ்…

Published:

செல்வராகவன் தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் மூத்த மகனும் நடிகர் தனுஷின் மூத்த சகோதரரும் ஆவார். செல்வராகவன் தமிழில் மட்டுமல்லாது சில தெலுங்கு படங்களையும் இயக்கியுள்ளார்.

2002 ஆம் ஆண்டு ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் தனது சகோதரரான தனுஷை நாயகனாக நடிக்க வைத்து அறிமுகப்படுத்தினார். அடுத்ததாக மறுபடியும் தனுஷை வைத்து 2003 ஆம் ஆண்டு ‘காதல் கொண்டேன்’ படத்தை இயக்கினார். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி (2004), புதுப்பேட்டை (2006), ஆயிரத்தில் ஒருவன் (2010), மயக்கம் என்ன (2011), இரண்டாம் உலகம் (2013) ஆகிய திரைப்படங்களை இயக்கினார். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு அனைவரின் பாராட்டுகளைப் பெற்றார் செல்வராகவன்.

இயக்குவதில் மட்டுமல்லாது நடிப்பிலும் ஆர்வம் கொண்டவர் செல்வராகவன். 2022 ஆம் ஆண்டு ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் செல்வராகவன். தற்போது தனுஷ் இயக்கிய ‘ராயன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் இயக்கும் படங்களும், படம் இயக்குவதற்கு தேர்வு செய்யும் கதைக்களமும் தனித்துவமாகவும் இருக்கும். தனித்துவமான எண்ணங்களையும் சிந்தனைகளையும் கொண்டவர் செல்வராகவன். தற்போது நடிப்பிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.

தற்போது ராயன் திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய செல்வராகவன், மனிதர்கள் எல்லாரும் ஒன்றுதான். நமக்கு கை, கால், தலை இருப்பது போலவே எல்லார் கூடவும் இருப்பது பொறாமை. எனக்கு அந்த குணம் இல்லைனு சொல்றவனை நம்பாதீங்க. அதனால அடுத்தவனுக்காக வாழ முடியாது என்று அட்வைஸ் செய்துள்ளார் செல்வராகவன்.

மேலும் உங்களுக்காக...