சென்னையில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரின் தந்தை ராஜேஷ் தெலுங்கில் 50 படங்களுக்கு மேல் நடித்தவர். இவரது தாத்தா அமர்நாத் அவர்களும் தெலுங்கு நடிகர் ஆவார். இவரது அத்தை ஸ்ரீலக்ஷ்மி 500 படங்களுக்கு மேல் நடித்த தெலுங்கு நகைச்சுவை நடிகராவார். கலைக் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
சன் டிவியின் ‘அசத்த போவது யாரு’ நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். பின்னர் கலைஞர் தொலைக்காட்சியின் ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெற்றிப் பெற்றார். இதன் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
2010 ஆம் ஆண்டு ‘நீதானா அவன்’ படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். 2015 ஆம் ஆண்டு ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் நடித்தது ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது.
தொடர்ந்து ‘தர்மதுரை’, ‘குற்றமே தண்டனை’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’, ‘கனா’, ‘க. பெ. ரணசிங்கம்’, ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். எந்த கதாபாத்திரம் ஆனாலும் எதார்த்தமாக நடிப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறியது என்னவென்றால், எனக்கு நிறைய கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் சமூக பொறுப்புள்ள கதாபாத்திரம், குடும்பங்கள் ரசிக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். அதனால் கோடி ருபாய் கொடுத்தாலும் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.