கமலுக்கு உலக நாயகன், ரஜினிக்கு சூப்பர் ஸ்டார்-னு பட்டம் யாரு கொடுத்தாங்க தெரியுமா?

By Velmurugan

Published:

ஒரு நடிகர் இரண்டு அல்லது மூன்று படங்களில் ஹிட் கொடுத்த உடனேயே அவருக்கு ரசிகர்களாலும் அல்லது பிரபலங்களாலும் ஏதாவது ஒரு பட்டம் கொடுக்கப்படுகிறது. ஆனால் சில நாட்களில் ரசிகர்கள் அதை மறந்து விடுகின்றனர். அப்படி இருக்க இந்த ஆறு முன்னணி ஹீரோவுக்கு கொடுக்கப்பட்ட பட்டம் என்றும் அழியாமல் அவர்களுடைய அடையாளமாகவே மாறிவந்துள்ளது.

இவங்களுக்கு இந்த படங்கள் எப்போது கொடுக்கப்பட்டது, யாரால் வைக்கப்பட்டது என்பது குறித்து தான் இந்த ஒரு தொகுப்பில் பார்க்க போறோம் வாங்க…

நடிகர் விஜய்

கிட்டத்தட்ட 2 தலைமுறை தாண்டி இளைய தளபதியாக ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் தான் நடிகர் விஜய். இவர் நடித்த ரசிகன் திரைப்படத்தின் போது தான் இளைய தளபதி என்னும் பட்டம் வழங்கப்பட்டது. அதன் பின் விஜய்யின் பிடித்தமான இயக்குனரான அட்லி தான் இளைய தளபதி விஜய் அவர்களை தளபதி விஜய்யாக மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல்

நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமா உலகத்தின் அகராதியாக பார்க்கப்படும் நடிகர். இவருக்கு உலகநாயகன் என்னும் பட்டம் கொடுத்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். தெனாலி படத்தின் ரிலீஸின் போது தான் இந்த உலகநாயகன் என்னும் டைட்டில் கார்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கமலுக்கு முதலில் இது மாதிரியான பட்டம் கொடுத்தது பிடிக்கவே இல்லை. அதன் பின்னர் இயக்குனர் அவர்களுடைய கட்டாயத்தின் பேரில் தான் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் அஜித்குமார்

அஜித்குமார்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த அதிரடி ஆக்சன் திரைப்படம் தீனா. இந்த படத்தில் ஒரு காட்சியில் மகாநிதி சங்கர் அஜித்தை தல என அழைத்திருந்தார். அதுவே அவருக்கு பட்ட பெயரானது. இந்நிலையில் சமீபத்தில் இனிமே என்னை யாரும் தல என்று அடையாளப்படுத்தக்கூடாது என்றும், என்னை ஏகே என அழைக்குமாறும் அஜித் அதிகாரப்பூர்வமாவே அறிவித்திருந்தார்.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்னும் பாட்டுக்கு சொந்தக்காரர் தான் நடிகர் ரஜினி. இன்றைக்கு வரைக்கும் சூப்பர் ஸ்டார் என திரையரங்குகளில் வரும் டைட்டில் கார்டுக்கு பயங்கர ஒரு வரவேற்பு கிடைக்கிறது.

1978ஆம் ஆண்டு ரஜினிகாந்த் அவர்கள் முதன்முதலில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டார். அந்த பட்டம் இப்போது வரைக்கும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1970களில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜிகணேசன் மிக பெரிய நடிகர்களாக வெற்றி படங்களை கொடுத்த காலம் என்பதால், ரஜினி இந்த பெயரை ஏற்க ரொம்பவே தயங்கியதாகவும் கூறப்படுகிறது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு பெண் வேடத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? எந்த படத்தில் தெரியுமா?

நடிகர் சியான் விக்ரம்

நடிகர் விக்ரமை தமிழ் சினிமாவுக்கு அடையாளப்படுத்திய சேது படத்தில் தான் இயக்குனர் பாலா அவர்கள் சீயான் என்னும் பெயரை பட்ட பெயராக பயன்படுத்தி இருப்பார். இந்த பெயருக்கு அர்த்தம் கெட்டிக்காரன் என ஒரு பேட்டியில் பாலா சொல்லி இருக்கிறார். சேது படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விக்ரம் சீயான் விக்ரம் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.