நீண்ட வருடங்களுக்கு பிறகு பெண் வேடத்தில் நடிக்கும் கமல்ஹாசன்! எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து வந்தவர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அவர் தனது படங்களில் மட்டுமல்ல, நடிப்பிலும் புதுமைகளைக் கொண்டு வந்தவர்.

கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய ‘அவ்வை சண்முகி’ (1996) என்ற படத்தில் கிளாசிக்கில் முழு நீள பெண் கதாபாத்திரத்தை வெளிப்படுத்திய சில நடிகர்களில் இவரும் ஒருவர். பெண்வேடத்தில் நடிப்பதை விட அந்த கதாபாத்திரம் அமைவது மிகவும் கடினம். ஆனால் கமல் அந்த கதாபாத்திரத்தில் மிகவும் எளிதாக பெண் வேடத்திற்கு பொருத்தமாகவும் நடித்து அசத்தி இருப்பார்.

பின்னர் 2008 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் ‘தசாவதாரம்’ திரைப்படத்தில் கமல் ஒரு வயதான பெண்ணாக நடித்ததன் மூலம் பார்வையாளர்களை திகைக்க வைத்தார். தற்போது கிடைத்த தகவல்களின்படி, நடிகர் கமல் ஷங்கர் இயக்கத்தில் வரவிருக்கும் ‘இந்தியன் 2’ இல் பெண் கெட்அப்பில் நடித்துள்ளார் என தகவல் கசிந்துள்ளது. இப்படத்தில் முக்கியமான காட்சி ஒன்றுக்காக சிறிது நேரமே நீடிக்கும் பெண் தோற்றத்தில் கமல் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிக்கும் போது கெட்டப்பில் ஒரு பெண்ணாக தோன்றியபோது, ​​​​நடிகர்கள் மற்றும் குழுவினர் மேக்கப்பில் கச்சிதமாக இருப்பதாகவும் அவரது அந்த தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் அவர் மறுபடியும் பெண் கதாபாத்திரத்தில் நடித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...