மாஸ்டர் படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்யக்கூடாது… விஜய் எதிர்ப்பு!!

By Staff

Published:

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் படமாகும். இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படமானது ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்தநிலையில் கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்தத் திரைப்படமானது திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தநிலையில், விஜய் பிறந்தநாளான ஜூன் 26 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

6c6c4634c0bf96445d1f100f52caed1a

ஆனால் இப்போது கொரோனோ தீவிரமாக தலைவிரித்தாடும் நிலையில் ஜூலை மாதம் வரை திரையரங்குகள் திறக்கப்படாது என்று கூறப்படுகின்றது. மேலும் மாஸ்டர் படமானது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இதற்கு படக்குழு மறுப்புத் தெரிவித்தநிலையில், நடிகர் விஜயும் படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓடிடியில் ரிலீஸ் செய்தால் ரசிகர்கள் தியேட்டரில் வந்து கொண்டாடும் அளவு கொண்டாட முடியாது. அதனால் படத்தை  ஓடிடியில் ரிலீஸ் செய்யக்கூடாது” என்று கூறியுள்ளார்.

Leave a Comment