சிவாஜியின் பேச்சைக் கேட்காமல் நஷ்டம் அடைந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்!

By Velmurugan

Published:

நடிகர் திலகம் சிவாஜி தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞராகவும், சிறந்த நடிப்பு திறமை கொண்ட நடிகராகவும் இருந்ததால் ஒரு படம் குறித்து அவர் எடுக்கும் முடிவுகள் பொருத்தமானதாகவும், சரியாகவும் அமையும். மேலும் அவர் கூறும் பதில் அதன் பின் ஆயிரம் அர்த்தங்களை கொண்டதாகவும் இருக்கும். இந்த காரணத்தினாலே நடிகர் சிவாஜி மற்ற நடிகர்களுக்கும் சரி மற்ற பிற இயக்குனர்களுக்கும் பல நேரங்களில் ஆலோசனை கூறி உதவி செய்து வந்துள்ளார். ஆலோசனையோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை தவறுதலாக செய்தால் இப்படி விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கையும் கொடுத்து வந்துள்ளார்.

அந்த நேரத்தில் நடிகர் சிவாஜி ஒரு தயாரிப்பாளரிடம் திரைப்படம் குறித்து ஒரு கருத்துக்களை பகிர்ந்து இருந்தார். அதையும் மீறி அந்த தயாரிப்பாளர் அந்த படத்தை எடுத்தார்.மேலும் தயாரிப்பாளர் உடன் இணைந்து இயக்குனரும் அந்த படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். இறுதியில் அந்த திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது இது குறித்து முழு தகவலை பார்க்கலாம்.

1960 ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தெய்வப்பிறவி . இந்த படத்தில் நடிகர் சிவாஜி உடன் இணைந்து பத்மினி மற்றும் எஸ் எஸ் ராஜேந்திரன் இணைந்து நடித்திருப்பார்கள். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிய இந்த படத்திற்கு தேசிய திரைப்பட விருது, சிறந்த திரைப்படத்தில் காண அகில இந்திய சான்றிதழ் என அனைத்தும் கிடைத்துள்ளது. அதற்குக் காரணம் இந்த படத்தில் நடிகர் சிவாஜியின் நடிப்பு மற்றும் பத்மினியின் நடிப்பு இவர்களுடன் இணைந்து எஸ் எஸ் ராஜேந்திரன் என மூவரின் நடிப்பும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு மிகச்சிறப்பாக அமைந்திருக்கும். இந்தத் திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான ஒரு வாய்ப்பு ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. உடனே இந்த செய்தியை ஏவிஎம் சரவணன் நடிகர் திலகம் சிவாஜியை நேரில் சந்தித்து கூறியுள்ளார்.

இந்த தகவலை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சிவாஜி அதே நேரத்தில் இந்த திரைப்படத்தில் எங்கள் மூவரின் நடிப்பு போட்டி போட்டு மிகச் சிறப்பாக அமைந்திருக்கும், இதேபோன்று நடிக்கும் நடிகர்கள் வைத்து இந்த திரைப்படத்தை எடுத்தால் மட்டுமே இது வெற்றி திரைப்படம் என எச்சரித்துள்ளார். சிவாஜியின் இந்த எச்சரிக்கையை தெரிந்து கொண்ட இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சுவிற்க்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இந்த படத்தை தமிழில் இயக்கியதும் கிருஷ்ணன் பஞ்சு தான். ஆனால் இயக்குனர் நடிகர் திலகம் சிவாஜியின் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இந்த படத்தை ஹிந்தியில் நானே தயாரிப்பேன் என ஒரே முடிவாக இருந்துள்ளார்.

விஜயகாந்திற்கு இரங்கல் அறிக்கை விடாமல் வெளிநாட்டில் குத்தாட்டம் போடும் தல.. அஜித்தை விளாசித் தள்ளிய விமர்சகர்!

அதேபோல் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்களுக்கும் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக தோன்றியுள்ளது. இறுதியில் தெய்வப் பிறவி திரைப்படம் ஹிந்தியில் பிந்த்யா என்னும் டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டு இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டது. தமிழில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற தெய்வ பிறவி திரைப்படம் ஹிந்தியில் வெற்றி பெறத் தழுவியது. அப்போது நடிகர் திலகம் எச்சரித்த அந்த வார்த்தை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. நடிகர் திலகம் சிவாஜியின் வார்த்தையை மீறி படம் எடுப்பது தவறு என அவர்கள் புரிந்து கொண்டனர்.