விஜயகாந்திற்கு இரங்கல் அறிக்கை விடாமல் வெளிநாட்டில் குத்தாட்டம் போடும் தல.. அஜித்தை விளாசித் தள்ளிய விமர்சகர்!

தென்னிந்திய சினிமாவில் நடிகர் அஜித் தற்பொழுது உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். வருடத்திற்கு ஒரு படங்கள் மட்டுமே நடித்தாலும் அந்த படம் மிக சூப்பர் ஹிட் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் சிரமப்பட்டு நடிக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். தற்பொழுது விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜான் நாட்டின் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது படப்பிடிப்பிற்கு பிரேக் விடப்பட்டுள்ள காரணத்தினால் நடிகர் அஜித் துபாயில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் புகைப்படங்கள், வீடியோக்கள், அவரின் அறிக்கைகள் என அனைத்தும் சோசியல் மீடியாவில் சரியாக வந்து கொண்டிருக்கும் பொழுது மறைந்த பிரபல நடிகர் விஜயகாந்திற்காக இரண்டு வரி இரங்கல் பதிவு போட்டு ஒரு அறிக்கையை சுரேஷ் சந்திரா மூலமாக நடிகர் அஜித்தால் வெளியிட முடியாதா என கேள்வி எழுப்பியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் அந்தணன். மேலும் இது ரசிகர்களின் கேள்வியாகவும் அமைந்துள்ளது. நடிகர் அஜித் செய்து வரும் செயல் கொஞ்சம் கூட சரியில்லை என்றும் மேலும் தவறு செய்து கொண்டு வருகிறார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக நடிகர் அஜித் இருந்து வந்தாலும் மற்ற ஹீரோக்களை போல அல்லாமல் தனக்கென தனி சித்தாந்தத்தை உருவாக்கி வாழ்ந்து வருகிறார். மேலும் தனக்கென எந்த நடிகர் சங்கமும் வேண்டாம் என அதை பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே கலைத்து விட்டார். சமீபத்தில் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் அஜித்குமார், ஏ கே என அழைத்தால் போதும் என ரசிகர்களிடம் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் இறுதி சடங்கின் போது பிரதமர் மோடியிலிருந்து தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள், ரஜினி, விஜய் என்ற பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் என திரையுலகமே ஒன்றுகூடி தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வந்துள்ளார்கள். மேலும் வெளிநாட்டில் படப்பிடிப்பில் மாட்டிக் கொண்டுள்ள நடிகர் சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் என மற்ற நடிகர்களும் தங்கள் இரங்கல்களை சோசியல் மீடியாக்களில் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் அஜித் விஜயகாந்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தாரா, இல்லையா என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக நடிகர் அஜித் தொலைபேசி மூலமாக பிரேமலதா மற்றும் விஜயகாந்தின் மகனிடம் இரங்கல் தெரிவித்ததாகவும் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் சில தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அது குறித்த எந்த உறுதியான ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் அஜித் போன் செய்து பேசியதாகவும் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் பரப்பப்படும் தகவல் எல்லாம் சுத்தம் பொய் எனவும் திரை விமர்சகர் மற்றும் பத்திரிக்கையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் தற்பொழுது புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் தனது மகள் அனுஷ்காவின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடி மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்.

நான் தான் அவன அடித்தேன் என உண்மையை உடைத்த ஐஸ்வர்யா ரகுபதி! கேப்டன் மில்லர் பட விழாவில் நடந்த சர்ச்சை!

வெளிநாட்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் நடிகர் அஜித்தால் தமிழ்நாட்டில் நடிகர் விஜயகாந்தின் இரங்கல்களில் ஏன் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் காசு வாங்க வேண்டாம் எனக் கூறி பத்து லட்ச ரூபாயை நடிகர் அஜித் உதவி தொகையாக வழங்கியதாகவும் சில தகவல்கள் பரவி வருகிறது. அதேபோல தன் படங்கள் வெளியாகும் பொழுது டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என பட உரிமையாளர்களிடமும் தியேட்டர் ஓனர்களிடமும் அஜித் வேண்டுகோள் வைப்பாரா என கேள்வி எழுப்பி உள்ளார் அந்தணன். அஜித்தின் இந்த கொண்டாட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரும் நிலையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே இது காட்டுத் தீயாக பரவி சில சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

தளபதி விஜய் கேப்டன் மறைவிற்கு வந்து இரண்டு முறை அஞ்சலி செலுத்தியுள்ளார். ஆனால் நடிகர் அஜித்தால் ஒரு இரண்டு வரி இரங்கல் பதிவு கூட வெளியிட முடியாமல் அமைதி காப்பது முறையானதாக இருக்காது என்பது ரசிகர்களின் கருத்தாகவும் மாறி வருகிறது. மேலும் விமர்சகர் அந்தணன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை கவனித்த அஜித் ரசிகர்கள் அது நடிகர் அஜித்தின் தனிப்பட்ட விஷயம் அதில் நாம் தலையிடக்கூடாது எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.