அடடா மிஸ்ஸாகிடுச்சே முந்தானை முடிச்சு பார்ட் 2… சொன்னது அந்த பிரபலமா?

முருங்கைக்காய் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் மறைந்த திரைக்கதை மன்னன் பாக்கியராஜ் தான். அவரது முந்தானை முடிச்சு படத்தை யார் தான் மறக்க முடியும்? அப்பவே ஒரு மாஸான கமர்ஷியல் ஹிட்டை சமூகத்துக்குத்…

முருங்கைக்காய் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் மறைந்த திரைக்கதை மன்னன் பாக்கியராஜ் தான். அவரது முந்தானை முடிச்சு படத்தை யார் தான் மறக்க முடியும்? அப்பவே ஒரு மாஸான கமர்ஷியல் ஹிட்டை சமூகத்துக்குத் தேவையான ஒரு மெசேஜ் உடன் சொல்லி இருந்தார் பாக்கியராஜ்.

படத்தின் வெற்றிக்கு இதுதான் மிக முக்கிய காரணம். அந்த வெற்றியின் தொடர்ச்சியாக பார்ட் 2 வரப்போவதாக தகவல் சமீபத்தில் தான் வெளியானது. ஆனால் அதற்குள் பொய்த்துப் போனதே. வாங்க அதுபற்றி பார்ப்போம்.

முந்தானை முடிச்சு பட சூட்டிங்குக்கு எங்க ஊருக்கு வந்தப்ப ஊர்ல சின்ன பசங்களா இருந்த எங்களை எல்லாம் நடிக்க வச்சார். 2 மாசம் எங்க ஊர்ல தான் எடுத்தார். சூட்டிங் எடுக்கும்போது அவர் என்ன சாப்பிடுறாரோ அதையே எல்லாரும் சாப்பிடணும்னு சொல்லி போடுவார்.

2023ல் கூட எங்களை எல்லாம் மெட்ராஸ்ல கூப்பிட்டு பேட்டி எடுத்தார். அப்போ கூட முந்தானை முடிச்சு பார்ட்2 எடுக்கப் போறேன். உங்களை எல்லாம் கூப்பிடுவேன்னு சொன்னார் . ஆனா சீக்கிரம் காலமாவார்னு நினைக்கல என்கிறார் முந்தானை முடிச்சு படத்தின் குழந்தை நட்சத்திரமான பகவதி கிருஷ்ணவேல்.