அவரின்றி விஜயகாந்த் அலுவலகத்தில் ஓரணுவும் அசையாது… தயாரிப்பாளர் சொன்ன அந்த பிரபலம்!

பிரபல படத்தயாரிப்பாளரும், கேப்டன் விஜயகாந்தின் நெருங்கிய நண்பருமான இப்ராகிம் ராவுத்தரின் 11வது நினைவு நாள் இன்று. தமிழ்சினிமா உலகத்தைப் பொருத்தவரைக்கும் எத்தனையோ இணைபிரியாத நண்பர்களை இந்த சினிமா உலகம் தந்துள்ளது. அவர்களில் முக்கியமான இணையாக…

பிரபல படத்தயாரிப்பாளரும், கேப்டன் விஜயகாந்தின் நெருங்கிய நண்பருமான இப்ராகிம் ராவுத்தரின் 11வது நினைவு நாள் இன்று. தமிழ்சினிமா உலகத்தைப் பொருத்தவரைக்கும் எத்தனையோ இணைபிரியாத நண்பர்களை இந்த சினிமா உலகம் தந்துள்ளது.

அவர்களில் முக்கியமான இணையாக கேப்டன் விஜயகாந்தையும், இப்ராகிம்ராவுத்தரையும் சொல்லலாம். தன்னோட நண்பரான விஜயகாந்த் தமிழ்சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தது மட்டுமல்ல. அதுல முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு அசராது உழைத்தவர் இப்ராகிம் ராவுத்தர்.

ஒரு காலகட்டத்தில் அவரது கனவு நினைவானது. தமிழ்சினிமா உலகில் ஒரு முக்கியமான இடத்திற்கு விஜயகாந்த் உயர்ந்தார். அப்படி வளர்ந்ததுக்குப் பிறகு தன் நண்பரான இப்ராகிம் ராவுத்தருக்கு விஜயகாந்த் அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அது அசாதாரணமானது.

இப்ராகிம் ராவுத்தர் நட்புக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் என்பது விஜயகாந்துக்கு நன்றாகத் தெரியும். அதை அவர் உணர்ந்து இருந்த காரணத்திற்காகத் தான் அப்படி ஒரு இடத்தை விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தருக்குக் கொடுத்தார்.

அந்தக் காலகட்டத்தில் விஜயகாந்த் யாருடைய இயக்கத்தில் நடிக்கணும்? யாருடைய தயாரிப்பில் நடிக்கணும்? நடிக்கிறதுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கணும்? எல்லாம் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக இருந்தவர் இப்ராகிம் ராவுத்தர். அவரின்றி விஜயகாந்தின் அலுவலகத்திலே ஒரு அணுவும் அசையாது.

தான் ஒரு கதாநாயகனாக உயர்ந்ததும், தன்னோட நண்பரான இப்ராகிம் ராவுத்தரை தயாரிப்பாளராக்கி அழகு பார்த்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். இவர்களது நட்பைப் போல அடிக்கடி பார்க்க முடியாது. அவர்கள் குறிஞ்சிப்பூவைப் போன்றவர்கள் என்பது நிதர்சனமான உண்மை என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.