2019 ஆம் ஆண்டில் சர்ச்சையில் சிக்கிய “ஆடை”

By Staff

Published:

ரத்ன குமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான ஆடை படம் 2019 ஆம் ஆண்டில் அதிக சர்ச்சைக்கு உள்ளான திரைப்படமாகும்.

இந்தப் படத்தினை இயக்கிய இயக்குனர் ரத்னகுமாருக்கு இது 2 வது படமாகும், இவர் ஏற்கனவே மேயாத மான் என்ற ஹிட் படத்தினைக் கொடுத்துள்ளார்.

அமலாபாலுடன், ரம்யா, விவேக் பிரசன்னா, ரஞ்சனி, ரோகித் நந்தகுமார், கிஷோர் தேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தினை வீ ஸ்டூடியோஸ் சார்பில் விஜி சுப்ரமணியன் தயாரித்து நடித்துள்ளார். சுதந்திரக் கொடி என்கிற காமினி ஒரு காமெடி ஷோவில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கிறார்.

38fe61880cdb0b59dc187e6dba08a8ad

அவர் ஒருநாள் குடிபோதையில் அலுவலகத்தில் நண்பர்களுடன் இரவு நேரத்தில் இருக்கிறார். காலை எழுகையில் ஆடை இல்லாமல் தவிக்கும் அவர், எவ்வாறு அதில் இருந்து வெளிவருகிறார் என்பதே மீதிக் கதையாகும்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்து, இந்தப் படம் பெரிய அளவிலான விமர்சனங்களை சந்தித்தது. அவர் ஆடை படத்தின் காரணமாக தனிப்பட்ட முறையிலும் விமர்சிக்கப்பட்டார்.

பலரும் அவரது திருமண வாழ்க்கை குறித்து விமர்சிக்கத் துவங்கினர், இவை ஒருபுறம் இருக்க மகளிர் சங்கத்தினர் படத்தினை ரிலீஸ் செய்யக் கூடாது என்று போர்க் கொடி தூக்கினர்.

பல விமர்சனங்களைத் தாண்டி இப்படம் வெளியாகி, தாறுமாறாக ஹிட் ஆனது.

Leave a Comment