தென்னிந்திய திரையுலகின் மாஸ் ஹீரோவான தளபதி விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக இணைந்து லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர்கள் கூட்டணியில் முன்னதாக மாஸ்டர் படம் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்துள்ளது என்பதால், தற்பொழுது லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் லியோ படத்தில் கைதி பட ஜார்ஜ் மரியான், மேத்தியூ தாமஸ், பாலிவுட் ஸ்டாரான சஞ்சய் தத், மலையாள சூப்பர் ஸ்டாரான நிவின்பாலி, மன்சூர் அலிகான், வில்லன் நடிகர் பாபு ஆண்டனி, நடிகை அபிராமி, அர்ஜுன் தாஸ், பகத் பாசில்,இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் மிஸ்கின், பாலிவுட் நடிகர் ஸ்மித் , நடிகர் ஹாரிஸ் உத்தமன், நடிகை பிரியா ஆனந்த், ஆக்சன் கிங் அர்ஜின், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, நடிகர் சத்தியராஜ், நடிகர் கதிர் மற்றும் ராம கிருஷ்ணன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர கூட்டத்தை களமிறங்கியுள்ளனர்.
மேலும் படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால் படத்தின் ப்ரொமோஷன் பணிகளையும் படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் அடுத்த வாரம் வர உள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கும் நிலையில் படத்தின் சண்டை காட்சிகள் குறித்து தற்பொழுது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் லியோ படத்தில் நடித்த நடிகர் ராம கிருஷ்ணன் படத்தின் சண்டை காட்சிகள் குறித்த சில சுவாரசியமான தகவல்களை சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதாவது லியோ படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான நா ரெடி பாடல் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் மாஸ் ஹிட் கொடுத்தது. இந்நிலையில் இந்த பாடல் உருவான தொழிற்ச்சாலை செட்டப்பில் தெறிக்க விடும் சண்டைக்காட்சிகள் ஒன்று படமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிங்கிள் சாட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த சண்டைக்காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்றும் அன்பரசன் மாஸ்டர் சண்டைக்காட்சிகளை படப்பிடிப்பிற்கு முன் பைட்டர்களை வைத்து பல முறை பயிற்சி எடுத்த பின்தான் தளபதி விஜய் அவர்களை நடிக்க வைத்துள்ளார்.
மேலும் தன்னுடைய கதாபாத்திரம் லியோ படத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் திரையில் வரும் என்றும் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளிலும், காஸ்மீர் காட்சிகளில் தான் இருப்பதாக நடிகர் ராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு சீனிலும் என்னுடைய நடிப்பு வேறு வேறு மாதிரியாக இருக்கும் என்றும் மேலும் இந்த லியோ வாய்ப்பு தனக்கு சாண்டி மாஸ்டர் மூலமாக தான் கிடைத்து என கூறியுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக இனி யாரு நடிக்க போறாங்க தெரியுமா?
ஒரு இயக்குனராக சாண்டி மாஸ்டரை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுக்க அவரிடம் கதை சொல்ல செல்லும் போது தான் சாண்டியுடன் நெருக்கம் ஏற்பட அவர் இயக்குனர் லோகேஷ்க்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது உடனே லோகேஷிடம் படத்தில் ஏதாவது வாய்ப்பு இருந்தால் தருமாறு கேட்க அப்படிதான் லியோ வாய்ப்பு கிடைத்தாக ராம கிருஷ்ணன் கூறியுள்ளார்.
லியோ படம் முழு வித்தியாசமான கதையாக இருக்கும் என்றும் புதிய கீதை படத்தில் உதவி இயக்குனராக இருக்கும் போது தளபதியை பார்த்தது, ஆனால் லியோ படப்பிடிப்பின் போது மீண்டும் பார்த்த நேரம் அவர் என்னை கட்டி பிடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என தெரிவித்துள்ளார்.