எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக இனி யாரு நடிக்க போறாங்க தெரியுமா?

பல வருடங்களுக்கு முன்னதாக பிரபல சின்னத் திரையான சன் டிவியில் கோலங்கள் என்னும் தொடர் கிட்டத்தட்ட பெரிய மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக பிரபலமடைந்தது. மேலும் இந்த தொடர் வசூலை வாரி குவித்தது மட்டும் இல்லாமல் டிஆர்பி ரேட்டிங்ல் யாராலும் அடிக்க முடியாத அளவிற்கு முன்னிலை வகித்தது.

சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்க கூடிய நடிகையாக தேவயானியை உயர்த்தியது கோலங்கள் தொடர் தான். மேலும் அதே கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம் தான் எதிர்நீச்சல் தொடரை இயக்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது.

தற்போது கோலங்கள் தொடரை விட மாபெரும் வெற்றி நடை போடும் வரும் எதிர்நீச்சல் தொடரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. மேலும் தென்னிந்திய திரை உலகின் முன்னணி ஹீரோவான தளபதி விஜய் அவர்களில் அம்மா ஷோபா சந்திரசேகர் அவர்கள் கூட இந்த தொடரின் ரசிகை தான் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்நீச்சல் தொடரை பார்த்து வருவதாக ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அந்த அளவிற்கு டிஆர்பி ரேட்டிங்கில் தாறுமாறாக முன்னிலையில் உள்ள தொடர் எதிர்நீச்சல். இந்த தொடர் இவ்வளவு பிரபலமடைய முக்கிய காரணம் எதிர்நீச்சல் திருச்செல்வம் வடிவமைத்த குணசேகரன் என்னும் கதாபாத்திரமும், அந்த கதாபாத்திரத்தில் கிட்டத்தட்ட வாழ்ந்து இருந்த அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்த தற்போது மறைந்த மாரிமுத்துவின் நடிப்பும் தான்.

அந்த அளவுக்கு குணசேகரன் கதாப்பாத்திரம் உடன் நடித்த எல்லாருக்குமே சரியான போட்டியாக அவரது நடிப்புத் திறமை இருக்கும். அந்த தொடரில் தன்னுடைய மகன், மகள். உறவினர்கள் என அனைவருக்கும் முன்பும் ஒரு பண திமிரு பிடித்த குடும்ப தலைவன் எப்படி இருப்பாரோ, அதை கொஞ்சம் கூட குறைவில்லாமல் அப்படியே ஸ்க்ரீனில் கொண்டுவந்தவர் மாரிமுத்து அவர்கள்.

பொக்கிஷம் படத்தில் நடிக்க தயாராக இருந்த விஜய்! வாய்ப்பு பறிபோனது எப்படி?

ஆனால் மாரிமுத்து அவர்கள் தற்பொழுது உயிருடன் இல்லை. இப்போது அந்த குணசேகரன் கதாபாத்திரம் என்ன ஆகப்போகிறது என்ற கேள்வி அனைவரது மனதிலும் கேள்வி வர தொடங்கியுள்ளது. ஒருவேளை அந்த சீரியலிலும் அவருடைய கதாபாத்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார்களா என பல கேள்விகள் வந்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் திருச்செல்வம் இது குறித்து கூறுகையில், குணசேகரன் கதாப் பாத்திரத்திற்கு முடிவு இல்லை என்றும்,குணசேகரன் கதாபாத்திரம் இன்னும் நாடகத்தில் இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என பல பரிசீலனைக்கு பின் ஒரு முடிவு எடுத்திருப்பதாக  தெரிவித்துள்ளார்.

அந்த குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க போவது வேற யாரும் இல்லை, எழுத்தாளரும் நடிகருமான வேலராமமூர்த்தி அவர்கள் தான். வேலராமமூர்த்தியும் தற்பொழுது ஒரு பக்கம் எழுத்தாளராகவும், சினிமாவில் நடிகராகவும் ரொம்ப பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

கண்டிப்பாக வேலராமமூர்த்தியும் மறைந்த நடிகர் மற்றும் இயக்குனருமான மாரிமுத்துவின் குணசேகரன் கதாபாத்திரத்தில் ஏற்று நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மாரிமுத்து அளவுக்கு ஈடு கொடுத்து நடிக்க முடியுமா என நிலையில் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என நம்பப்படுகிறது. மாரிமுத்து எப்படி மக்கள் மனதில் இடம் பிடித்தார் அதே போல வேலராமமூர்த்தி அவர்கள் இடம் பிடிப்பாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...