கேப்டன் விஜயகாந்த் மட்டும் இப்போ தெம்பா இருந்தாருன்னா அரசியல் வெலலே வேறன்னு தான் இன்னைக்கு பேச்சு அடிபடுது. அந்த அளவு புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அரசியலில் வீரியமாக வளர்ந்து வந்தார். யாரு கண்ணு பட்டதோ அவரு திடீர்னு உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டார். அப்படிப்பட்ட விஜயகாந்த் பற்றி தலைவாசல் விஜய் என்ன சொல்கிறார்? பார்க்கலாமா…
சிவாஜி, கமல், அஜீத், விஜய்னு எல்லாருடனும் படம் நடிச்சிருக்கேன். விஜயகாந்த் சாரோட 8…. 10 படங்கள் நடிச்சிருக்கேன். சுவாரசியமான சம்பவம் பெரிய மருது படம். சூட்டிங் திண்டுக்கல்லு. அங்குவிலாஸ் மைதானத்தில சூட்டிங். அன்னைக்கு அவருக்கு பர்த் டே. இன்னைக்கு விஜயகாந்த்துக்கு பர்த் டேன்னு சொல்லி சூட்டிங் 2 மணிக்குன்னு சொன்னாங்க.
பார்த்தா அந்த ஹோட்டலுக்கு வெளியே எனக்குத் தெரிஞ்சி அஞ்சாயிரம் பேருக்கோ பத்தாயிரம் பேருக்கோ தையல் மெஷின், வேட்டி சேலை. அன்னைக்கு ஈவ்னிங் எல்லாருக்கும் சாப்பாடு. அவரு கையாலயே பரிமாறினாரு. அது மட்டுமல்ல. அவரோட ஆபீஸ் தி.நகருக்கு நீங்க போனீங்கன்னா முதல் வேலையா அவரு கேட்குறது நீங்க சாப்பிட்டீங்களா? யாரா இருந்தாலும்.
பிரசாத்துக்கு ஆப்போசிட்ல 24 ஹவர்ஸ் கிளினிக் வச்சிருந்தாரு. அதுல அவுட் பேஷண்டுக்கு ப்ரீயா ஆஸ்பிட்டலுக்கு வந்து மருத்துவம் பார்த்துட்டு போகலாம்.
சோ… இந்த மாதிரி வேலை… இந்த மாதிரி விஷயங்கள்லாம் வந்து அவரு தான்… நான் பார்த்தது. ஒரு தடவை நரசிம்மா சூட்டிங் ஹைகோர்ட்ல நடந்துது.
அது ராத்திரி நேரம். தூக்கம் வராம இருக்கறதுக்காக நானும் ரகுவரனும் பேசிக்கிட்டு இருந்தோம். சினிமாங்கறது ஒரு காலகட்டம் தான். அதுக்கு எக்ஸ்பரி டேட் இருக்கு. நீ என்ன பண்ணப் போறன்னு ரகு கேட்க, நான் அப்படியே என்னடா சொல்லன்னு தெரியாம ஷாக் ஆகிட்டேன். அப்புறமா பசங்க இப்பத் தான் வளர்ந்து வர்றாங்க.
அவங்க சினிமாவுல வந்த பிறகு சேர்ந்து நானும் சினிமாவுல டிராவல் பண்ணுவேன்னு சொல்ல… விஜயகாந்த் வர்றாரு… என்ன பேசிக்கிட்டு இருக்க விஜய்னு கேட்டாரு. நாங்க… சொல்ல. நீங்க என்ன செய்யப் போறீங்கன்னு அதே கேள்வியை அவருக்கிட்ட கேட்டோம். அதற்கு அவர் அரசியலுக்குப் போயிடுவேன்னாரு. அன்னைக்கு அவரு என்ன சொன்னாரோ அதே மாதிரி அரசியல் வந்துட்டாரு.