‘மவனே உன் நெஞ்சுல இருக்க..‘ மகாநதி பட வசனத்திற்கு அர்த்தம் சொன்ன தலைவாசல் விஜய்

By John A

Published:

வயது வித்யாசமின்றி ஒரு படம் பார்ப்பவர் அனைவரையும் எமோஷனலாக கனெக்ட் செய்து கண்களைக் குளமாக்கும் போது அந்தப் படம் விளம்பரம் இல்லாமலே பெரும் வெற்றி ஆகிறது. இந்தமாதிரி ஒரு சூழ்நிலையில் கமல் என்ற பிம்பத்தைத் தாண்டி கதைக்காக உருக வைத்த ஒரு படம் தான் மகாநதி.

இந்தப் படத்தின் டைட்டிலே சற்று சிறப்புதான். ஏனெனில் காவிரி, கிருஷ்ணா, சரஸ்வதி, யமுனா, பரணி என இந்தப் படத்தின் முதன்மை கேரக்டர்கள் அனைத்தும் வடிவமைக்கப்பட்டிருப்பதால் டைட்டிலே மகாநதி என்றானது. கடந்த 1994-ல் சந்தான பாரதி இயக்கத்தில், இளையராஜாவின் இசையில் வெளிவந்த இந்தப்படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

நாயகனுக்கு அடுத்தபடியாக கமலின் அற்புத நடிப்பு இதில் வெளிப்பட்டிருந்தது. சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினையும் இப்படம் பெற்றது. சுஜாதா மற்றும் கமல்ஹாசனின் கதையே படத்தினை வேற லெவலில் கொண்டு சேர்த்திருக்கும்.

நண்பன் இராவுத்தர் ஐடியாவால் கேப்டன் பிரபாகரனை 100வது படமாக தள்ளிப் போட்ட விஜயகாந்த்.. செதுக்கிய செல்வமணி..

இந்தப் படத்தில் கதைப்படி ஜெயிலுக்குச் சென்ற கமல் திரும்பி வந்து மகளைத் தேடும்போது அவள் கல்கத்தாவில் உள்ள விபச்சார விடுதியில் தள்ளப்பட்டு அங்கே விபச்சாரியாக வாழ்வதைக் கண்டு கலங்கி அழும் கமல் அந்த இடத்தில் பெண்களைப் பெற்ற ஒட்டுமொத்த அப்பாக்களின் கண்ணீரையும் பெற்று கலங்க வைப்பார்.

அதேபோல் மகனும் ஒரு நாடோடி சர்க்கஸ் கும்பலில் ஒண்டி அவர்களுடன் கயிறு கட்டி தாவுவதும், குதிப்பதுமாக இருப்பதைக் கண்டு பின் மீட்டு வருவார். இந்த சீனில் கமலின் மகனை தூக்கி வளர்த்தவராக தலைவாசல் விஜய் நடித்திருப்பார்.

கமல் இவர்களைக் கண்டு இவர்கள் இருப்பிடத்திற்குச் சென்று மகனை மீட்கும் போது தலைவாசல் விஜய் மீன்குழம்பு சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அப்போது கமல் மற்றும் பூர்ணம் விஸ்வநாதனை சாப்பிடுங்கள் என்று கூறியவுடன் பூர்ணம் விஸ்வநாதன் கதைப்படி பிராமணராதலால் முகம் சுளிப்பார்.

அப்போது தலைவாசல் விஜய் மவனே உன் நெஞ்சுல இருக்க மஞ்ச சுரத்தை எடுத்துடுவேன் என்று கோபமாகத் திட்டுவார். சென்னை பாஷையில் இதற்கு அர்த்தம் என்னவென்று சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்த தலைவாசல் விஜய் நெஞ்சில் அடிக்கும் போது வாய் வழியாக பித்த நீர் மஞ்சள் நிறத்தில் வெளி வந்து விடும் என்பதையே அவ்வாறு குறிப்பிட்டிருபபார். இந்த டயலாக் சீன் பேப்பரில் கிடையாது. நான் இயல்பாகப் பேசும் போது அந்த வசனம் வந்தது என்று தலைவாசல் விஜய் கமலிடம் கூறியிருக்கிறார். அவரும் பாராட்டியிருக்கிறார். மகாநதி தமிழ்சினிமாவின் ஒரு பொக்கிஷம்.