நண்பன் இராவுத்தர் ஐடியாவால் கேப்டன் பிரபாகரனை 100வது படமாக தள்ளிப் போட்ட விஜயகாந்த்.. செதுக்கிய செல்வமணி..

விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து வரலாற்று ஹிட் படமான கேப்டன் பிரபாகரனைக் கொடுத்தார் விஜயகாந்த். இந்தப் படம் அவரின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாகவும், 100-வது படமாகவும் அமைந்து திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது நண்பன் இப்ராஹிம் ராவுத்தரின் தயாரிப்பில் வெளியான புலன் விசாரணை படம் மிகப்பெரிய ஹிட்டானவுடன் ராவுத்தர் மீண்டும் இதே கூட்டணியை வைத்து படம் தயாரிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

ஆனால் இந்தப்படம் விஜயகாந்த்துக்கு 100-வது படமாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணி ஆர்.கே.செல்வமணியை அழைத்து கதை தயார் செய்யச் சொல்லியிருக்கிறார். ஆர்.கே.செல்வமணியும் அப்போது தென்னிந்தியா முழுவதும் சென்று லொகேஷன் பார்த்து விட்டு வீரப்பன் கதையை திரைப்படமாக எடுக்கலாம் என்று கூற இராவுத்தர் முதலில் மறுத்திருக்கிறார்.

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலில் இப்படி ஓர் அதிசயமா? வைரமுத்துவும் இளையராஜாவும் செய்த மேஜிக்.

பின்னர் விஜயகாந்திடம் சொல்லுங்கள் அவன் என்ன சொல்லுகிறான் என்று கேட்டு வாருங்கள் என்று கூற விஜயகாந்தும் கதையைக் கேட்டு நண்பனைப் போல் கதையை மறுக்க செல்வமணி மீண்டும் சில திருத்தங்கள் செய்து தனது நண்பனைக் கொன்றவனைப் பழிவாங்கும் நோக்கிலும், காட்டுக்குள் இருக்கும் வில்லனைப் பிடிப்பது போன்றதுமாக கதையை மாற்றியிருக்கிறார்.

பின் இருவருக்குமே இந்தக் கதையில் திருப்தி ஏற்பட அதற்குள் விஜயகாந்துக்கு 95 படங்களுக்கு மேல் சென்று விட்டார். இதனிடையே ராவுத்தர் நினைத்தபடி 100-வது படமாக இப்பொழுது எடுத்தால் சரியாக இருக்கும் என்றெண்ணி கேப்டன் பிரபாகரன் ஷுட்டிங்கை ஆரம்பித்தனர்.

இப்படத்தின் சாகசக் காட்சிகள், வனக் காட்சிகள் அனைத்தும் கேரளாவின் அதிரப்பள்ளி அருவி, மற்றும் சாலக்குடி பகுதிகளில் படமாக்கப்பட்டது.  ஒருவழியாக ஷுட்டிங் அனைத்தும் முடிந்த பின் இறுதியாக இந்தப் படம் 1991ல் தமிழ்ப்புத்தாண்டு அன்று ரிலீஸ் ஆனது. படத்தைப் பார்த்த அனைவரும் கேப்டனின் சாகச சண்டைக் காட்சிகளைக் கொண்டாட திரைக்கதையும் அடுத்தடுத்த திருப்பங்களால் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்தது. வீரபத்ரனாக மன்சூர் அலிகான் நடிப்பில் மிரட்டினார்.

படத்தில் இரண்டே பாடல்கள்தான். இரண்டு பாடல்களுமே ரசிகர்களை தியேட்டரில் ஆட்டம் போட வைத்தன. வன அதிகாரியாக இந்தப் படத்தில் நடித்த விஜயகாந்தை மக்கள் அன்புடன் இந்தப் படத்தின் மூலம் கேப்டன் என அழைக்க ஆரம்பித்தனர். ரஜினி, கமல், போன்ற உச்ச நடிகர்களுக்கு அவர்களின் 100-வது படம் தோல்வியைக் கொடுத்த நிலையில் விஜயகாந்த்துக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. நண்பனுக்காக ராவுத்தரும், கேப்டனுக்காக ஆர்.கே. செல்வமணியும் கொடுத்த உழைப்பால் படம் அனைவருக்கும் ஓர் திருப்புமுனையைக் கொடுத்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews